வானவில் : செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ‘பிளேகோ பி.ஹெச் 70’


வானவில் : செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ‘பிளேகோ பி.ஹெச் 70’
x
தினத்தந்தி 19 Feb 2020 11:19 AM GMT (Updated: 19 Feb 2020 11:19 AM GMT)

குர்காவ்னைச் சேர்ந்த பிளே நிறுவனம் ‘பிளேகோ பி.ஹெச் 70’ என்ற பெயரில் புத்தாக்க சிந்தனையோடு வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நாய்ஸ் கேன்சலிங் வசதி புகுத்தப்பட்டுள்ளது.

ஓ.டி.டி. அடிப்படையில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்டவற்றில் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதை அணிந்து கொண்டு பார்ப்பதன் மூலம் தரமான வீடியோ, ஆடியோ காட்சிகளை பார்த்து, கேட்டு ரசிக்க முடியும். 

இதில் குவால்காம் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை கூகுள் அசிஸ்ட், அமேசான் அலெக்ஸா, ஆப்பிள் சிரி உள்ளிட்டவற்றிலும் இணைத்து செயல்படுத்த முடியும்.

வெளிப்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்க்க இதில் சி.வி.சி. 6.0 நுட்பம் (நாய்ஸ் கேன்சலிங்) வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் புரோட்டீன் லெதர் இயர் கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காதுகளுக்கு அதிக அழுத்தத்தை தராத வகையில் மிருதுவாக உள்ளது. கருப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் இது கிடைக்கிறது. விலை சுமார் ரூ.14,999.

Next Story