வானவில் : சோனி வயர்லெஸ் ஏ.என்.சி.


வானவில் : சோனி வயர்லெஸ் ஏ.என்.சி.
x
தினத்தந்தி 19 Feb 2020 11:26 AM GMT (Updated: 19 Feb 2020 11:26 AM GMT)

சோனி நிறுவனம் ஏ.என்.சி. தொழில்நுட்பம் கொண்ட வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. டபிள்யூ.ஹெச்.ஹெச் 910.என். என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.

புளூடூத் 5.0 இணைப்பு, ஹை ரெசல்யூஷனில் ஆடியோ வெளிப்படுத்தும் திறன், எல்.டி.ஏ.சி., தொடுதிறன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கியது. இதில் டியூயல் நாய்ஸ் தொழில்நுட்பம் உள்ளது. இது வெளிப்புற இரைச்சலை முற்றிலுமாக தடுத்துவிடும். 

ரெயில், பஸ் பயணத்தின் போதும் எவ்வித இரைச்சல் சத்தமின்றி துல்லியமாக இசையைக் கேட்டு மகிழ்ந்தபடி பயணிக்கலாம். இது 5 ஹெர்ட்ஸ் முதல் 40 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரையில் இசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் தொடுதிறன் சென்சார் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் கூற முடியும். 

இசையின் அளவை கட்டுப்படுத்த முடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம். 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே இரண்டரை மணி நேரம் செயல்படும் வகையில் சக்தி வாய்ந்த பேட்டரிகள் இதில் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.21,990.

Next Story