வானவில் : டூத்பேஸ்ட் டிஸ்பென்ஸர்


வானவில் : டூத்பேஸ்ட் டிஸ்பென்ஸர்
x
தினத்தந்தி 19 Feb 2020 11:53 AM GMT (Updated: 19 Feb 2020 11:53 AM GMT)

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஜியோமி நிறுவனம் பற்பசையை வெளியிடும் (டிஸ்பென்சர்) சாதனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புற ஊதாக் கதிர் வெளிப்படும்.

பற்பசை வெளியாகும் முன்பாக டூத் பிரஷ்ஷில் உள்ள கிருமிகளை அழிக்க புற ஊதாக் கதிர் வெளியாகும். தானியங்கி முறையில் இது செயல்படும். அதாவது பற்பசை வெளியாகும் பகுதியில் டூத் பிரஷ்ஷை நீட்டினால் உணர் சென்சார் மூலம் பற்பசையை இது வெளியிடும்.

டூத் பேஸ்டில் வெளிக்காற்று பரவாத வகையில் பாதுகாக்கும். அதேசமயம் ஒருநேரத்தில் டூத் பிரஷ்ஷில் எவ்வளவு பற்பசை தேவையோ அதை மட்டுமே வெளியிடும். இந்த டிஸ்பென்சர் சாதனம் கிருமி தொற்று ஏற்படாமலிருக்க இதில் புற ஊதாக் கதிர் வெளியாகும். இதை செயல்படுத்த ஜியோமி மிஜியா இயங்குதளம் (ஆப்) உள்ளது.

இதன் மேல் பகுதியில் 300 மி.லி. அளவுள்ள பேஸ்ட்டை வைக்கும் வசதி உள்ளது. ஒவ்வொரு முறை டூத் பிரஷ்ஷை நீட்டும் போதும் அது புறஊதாக் கதிர்களால் சுத்தம் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.900.

Next Story