சிறப்புக் கட்டுரைகள்

விற்பனை அடிப்படையில் அமைந்தடாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்மாருதி ஆல்டோ முதலிடம் + "||" + Sales based Maruti Suzuki 7 models on top 10 cars list

விற்பனை அடிப்படையில் அமைந்தடாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்மாருதி ஆல்டோ முதலிடம்

விற்பனை அடிப்படையில் அமைந்தடாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்மாருதி ஆல்டோ முதலிடம்
டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் இடம் பெற்றுள்ளன.
2019-ஆம் ஆண்டு விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மாருதி ஆல்டோ முதலிடத்தில் இருக்கிறது.

சியாம் புள்ளிவிவரங்கள்

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 2.08 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்து இருக் கிறது. முந்தைய ஆண்டில் அது 2.56 லட்சமாக இருந்தது. டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தில் உள்ளது.

மாருதி செடன் டிசையர் விற்பனை 24 சதவீதம் குறைந்து (2.64 லட்சத்தில் இருந்து) 1.98 லட்சம் கார்களாக குறைந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மாருதி சுவிப்ட் கார் 3-வது இடத்தில் உள்ளது. இந்தக் கார் விற்பனை 1.91 லட்சமாக குறைந்து இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 2.23 லட்சம் கார்களாக இருந்தது.

மாருதி பேலினோ விற்பனை 12 சதவீதம் குறைந்து (2.10 லட்சத்தில் இருந்து) 1.83 லட்சமாக குறைந்து இருக்கிறது. இது நான்காவது இடத்தில் இருக்கிறது. மாருதி வேகன் ஆர் 5-வது இடத்தில் உள்ளது. இந்தக் கார் விற்பனை (1.52 லட்சத்தில் இருந்து) 1.55 லட்சமாக உயர்ந்துள்ளது. மாருதி விதாரா பிரெஸ்ஸா விற்பனை 1.27 லட்சமாக இருக்கிறது. இந்த கார் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் எலைட் ஐ20 விற்பனை 1.23 லட்சமாக இருக்கிறது. இது 7-வது இடத்தில் உள்ளது. மாருதி ஈகோ விற்பனை 1.14 லட்சமாக உள்ளது. இது டாப் 10 பட்டியலில் 8-வது இடத்திற்கு வந்துள்ளது. கிரான்ட் ஐ10 விற்பனை 1.02 லட்சமாக இருக் கிறது. இந்த கார் ஒன்பதாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. கிரெட்டா விற்பனை 17 சதவீதம் குறைந்து 99,736-ஆக இருக்கிறது. இந்தக் கார் 10 இடத்தில் இருக்கிறது.

இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

13 சதவீதம் சரிவு

2019 காலண்டர் ஆண்டில் கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்து 29.62 லட்சம் வாகனங்களாக இருக் கிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த அளவு சரிவு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.