சிறப்புக் கட்டுரைகள்

நீரிழிவும்.. இதய செயலிழப்பும்.. + "||" + Diabetes and heart failure ..

நீரிழிவும்.. இதய செயலிழப்பும்..

நீரிழிவும்.. இதய செயலிழப்பும்..
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளாவிட்டால் இதய செயலிழப்பு ஏற்படக்கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ளாவிட்டால் இதய செயலிழப்பு ஏற்படக்கூடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகளும், சராசரியான ஆரோக்கியம் கொண்டவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். ஆய்வின் முடிவில் நீரிழிவு பாதிப்புகொண்ட 21 சதவீதம் பேருக்கு இதய செயலிழப்பும், மேலும் சில வியாதிகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயின் தன்மை அதிகரிக்காமல் இருப்பதற்கு சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை தவறாமல் கண்காணித்து வருவது மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கு உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடை அதிகரித்து கொண்டிருந்தால் அது டைப் - 2 நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகி விடும்.

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் உடலுக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகள் மேற்கொண்டு வரலாம். அதன் மூலம் நீரிழிவு நோயின் வீரியத்தை குறைக்கலாம். அவை இன்சுலின் அளவை மேம்படுத்தவும் உதவும். கார்போஹைட்ரேட் வீரியம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், அவை நீண்டகாலமாக ரத்தத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் கார்டிசால் ஹார்மோனை உற்பத்தி செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வைத்துவிடும்.