சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான் + "||" + Employment News: The call is for you

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் சுருக்கமாக FACT என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
உர நிறுவனம்

பிட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக், வெல்டர், கார்பெண்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், வெல்டர், பெயிண்டர், கணினி ஆபரேட்டர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவை சார்ந்த ஐ.டி.ஐ.. என்.டி.சி. சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 28-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.fact.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

விண்வெளி மையம்

வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் (NESAC) அமைப்பு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். விண்வெளி துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது புராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 110 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம் போன்ற பல்வேறு இடங்களில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த இடங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த, 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். இன்று (24-ந்தேதி) முதல் மார்ச் 11-ந்தேதி வரை நேர்காணல் நடக்கிறது.

எந்த நாளில், எந்த இடத்தில் உள்ள பணிகளுக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.nesac.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கி

வங்கிகளின் வங்கி என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில் மெடிக்கல் கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் மும்பை ரிசர்வ் வங்கி மண்டல முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 13-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். இது பற்றிய விவரங்களை https://rbidocs.rbi.org.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கொல்கத்தா அருங்காட்சியகம்

மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது கொல்கத்தாவில் உள்ள இந்தியன் அருங்காட்சியகம். தற்போது இங்கு ‘யங் புரபெஷனல்ஸ்’ பணிக்கு 14 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதுநிலை படிப்புடன், பணி சார்ந்த 2 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-2-2020 தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் மார்ச் 16-ந் தேதியாகும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianmuseumkolkata.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.