வானவில் :ஹேவல்ஸ் ஸ்மார்ட் சீலிங் பேன்


வானவில் :ஹேவல்ஸ் ஸ்மார்ட் சீலிங் பேன்
x
தினத்தந்தி 26 Feb 2020 9:39 AM GMT (Updated: 26 Feb 2020 9:39 AM GMT)

வீட்டு உபயோக மின் சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹேவல்ஸ் நிறுவனம் ‘கார்னிசியா 1’ என்ற பெயரில் ஸ்மார்ட் பேனை அறிமுகம் செய்துள்ளது.

அறையில் நிலவும் ஈரப்பதம், வெப்ப நிலை ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்ப சுழற்சி வேகத்தை தானாகவே இது நிர்ணயிக்கும். இதன் செயலி மூலமாகவும், குரல் வழி கட்டுப்பாடு மூலமாகவும் செயல்படுத்த முடியும். ஸ்மார்ட் மோட், ஸ்லீப் மோட், பிரீஸ் மோட் என மூன்று வகையான சுழற்சி அமைப்புகளைக் கொண்டது.

இரவில் தூங்கும்போது இயற்கை காற்று வருடுவதைப் போன்ற காற்றின் தன்மையை பிரீஸ் மோட் அளிக்கும். வழக்கமான பேன்களில் உள்ளதைப் போன்ற 5 நிலை சுழற்சி கொண்டது.

இதை அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்ட் மூலம் செயல்படுத்தலாம். கூடுதல் செயல்பாடுகளை இதற்கான செயலி (ஆப்) மூலம் செயல்படுத்த முடியும். இந்த செயலியானது அறையில் நிலவும் ஈரப்பதம், வெப்ப நிலை ஆகியவற்றை காட்டும். நாடு முழுவதும் முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் பேனின் விலை சுமார் ரூ.4,500.

Next Story