2018-19-ஆம் நிதி ஆண்டில் அதிக அளவு லாபம் ஈட்டிய 3 பொதுத்துறை நிறுவனங்கள்


2018-19-ஆம் நிதி ஆண்டில் அதிக அளவு லாபம் ஈட்டிய 3 பொதுத்துறை நிறுவனங்கள்
x
தினத்தந்தி 27 Feb 2020 9:10 AM GMT (Updated: 27 Feb 2020 9:10 AM GMT)

2019 மார்ச் நிலவரப்படி மொத்தம் 348 பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன.

புதுடெல்லி

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 3 பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவு லாபம் ஈட்டி உள்ளன.

348 நிறுவனங்கள்

2019 மார்ச் நிலவரப்படி மொத்தம் 348 பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றுள் 249 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. 86 நிறுவனங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. மூடப்படும் நிலையில் 13 நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், சென்ற நிதி ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய மற்றும் அதிக இழப்புக் கண்ட பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை அண்மையில் பாராளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பொதுத்துறையில், கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 70 நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 நிறுவனங்களின் பங்கு மட்டும் 94.04 சதவீதமாக உள்ளது. எஸ்.டி.சி., எம்.எஸ்.டி.சி., சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்கள் 2017-18-ஆம் ஆண்டில் லாபம் ஈட்டி இருந்தன. ஆனால் சென்ற நிதி ஆண்டில் இந்த நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அதிக இழப்பு கண்ட 10 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன.

ஏர் இந்தியா, பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய 3 நிறுவனங்கள் சென்ற நிதி ஆண்டில் கடும் இழப்பைக் கண்டுள்ளன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நிறுவனங்கள் இழப்பை சந்தித்து இருக்கின்றன.

ஓ.என்.ஜி.சி.

ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில், என்.டி.பி.சி. ஆகிய மூன்று நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி முன்னணியில் உள்ளன. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் ஈட்டிய ஒட்டுமொத்த லாபத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பங்கு அதிகபட்சமாக 15.3 சதவீதமாக இருக்கிறது. இந்தியன் ஆயில் மற்றும் என்.டி.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்கு முறையே 9.68 சதவீதம் மற்றும் 6.73 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா

கடந்த நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.4,600 கோடியை செயல்பாட்டு இழப்பாகக் கண்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு ஏறக்குறைய ரூ.58 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் சுமை இருக்கிறது. தொடர் இழப்பைச் சந்தித்து, பெரும் கடன் சுமை உள்ள நிலையில் இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story