ரூ.300 கோடி திரட்ட திட்டம் பங்கு வெளியீட்டில் களம் இறங்கும் ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல்


ரூ.300 கோடி திரட்ட திட்டம் பங்கு வெளியீட்டில் களம் இறங்கும் ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல்
x
தினத்தந்தி 27 Feb 2020 10:00 AM GMT (Updated: 27 Feb 2020 10:00 AM GMT)

ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை நிர்வாக சேவையில் ஈடுபட்டு வருகிறது.

ன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இவ்வெளியீடு மார்ச் 4-ந் தேதி தொடங்குகிறது. இதன் மூலம் இந்நிறுவனம் சுமார் ரூ.300 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை

ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை நிர்வாக சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் இந்த துறையில் எந்த நிறுவனமும் இதுவரை பங்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்துறையில் முன்னிலை வகிக்கும் இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்குகள் வெளியிட உள்ளது.

இந்நிறுவனம் தனது வெளியீட்டில் ரூ.43.50 கோடி வரையிலான மதிப்பிற்கு புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இது தவிர பங்குதாரர்களின் 94,42,164 பழைய பங்குகளும் சந்தைக்கு வருகின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடியாகும். மொத்தத்தில் ரூ.300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீடு எதிர்வரும் மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 6-ந் தேதி முடிய நடைபெற உள்ளது. இந்த நிதியை சில பழைய கடன்களை அடைத்தல் மற்றும் பொது நோக்கங்களுக்கு பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தன் பிராண்டு மதிப்பை வலுவாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என இந்நிறுவனம் கூறி உள்ளது.

வெளியீடு நிர்வாகம்

ஆன்டனி வேஸ்ட் ஹேண்டிலிங் செல் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை ஈக்விரஸ் கேப்பிட்டல் நிறுவனம் நிர்வகிக்கிறது. வெளியீட்டுக்குப் பின் இந்நிறுவனத்தின் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

Next Story