டிசம்பர் காலாண்டில் பி.டி.சி. இந்தியா லாபம் 30 சதவீதம் குறைந்தது


டிசம்பர் காலாண்டில் பி.டி.சி. இந்தியா லாபம் 30 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 27 Feb 2020 10:39 AM GMT (Updated: 27 Feb 2020 10:39 AM GMT)

பி.டி.சி. இந்தியா நிறுவனம், டிசம்பர் காலாண்டில் (2019) ரூ.63 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.

மும்பை

பி.டி.சி. இந்தியா நிறுவனம், டிசம்பர் காலாண்டில் (2019) ரூ.63 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.90 கோடி லாபம் ஈட்டி இருந்தது. ஆக, லாபம் 30 சதவீதம் குறைந்துள்ளது.

இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 16 சதவீதம் உயர்ந்து ரூ.3,834 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.3,309 கோடியாக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது பி.டி.சி. இந்தியா நிறுவனப் பங்கு ரூ.52.10-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.52.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.85-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.52-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.33 சதவீதம் குறைவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story