சந்தைகள் சரிவு எதிரொலி பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிந்தது


சந்தைகள் சரிவு எதிரொலி பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிந்தது
x
தினத்தந்தி 29 Feb 2020 10:39 AM GMT (Updated: 29 Feb 2020 10:39 AM GMT)

உலக நிலவரங்களால் இந்திய பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. நேற்று மட்டும் சென்செக்ஸ் 1448.37 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

ங்குச்சந்தைகள் சரிவு எதி ரொலியாக முகேஷ் அம்பானி உள்ளிட்ட இந்தியப் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ளது.

கொரோனோ வைரஸ் பீதியால் சர்வதேச முதலீட்டாளர்கள் சந்தை அபாயங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் பங்குகளை விற்றுத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இதனால் உலக அளவில் நிறுவனப் பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

உலக நிலவரங்களால் இந்திய பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. நேற்று மட்டும் சென்செக்ஸ் 1448.37 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. அதனால் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் சரிவடைந்துள்ளது. இதனால் இந்திய கோடீஸ்வரர்களின் நிகர சொத்து மதிப்பும் கடுமையாக குறைந்து இருக்கிறது.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்தான் (ஆர்.ஐ.எல்) முதலிடத்தில் இருக்கிறது. தற்காலிக புள்ளிவிவரங்களின்படி அவருடைய சொத்து மதிப்பு, நடப்பு ஆண்டில் இதுவரை (இரண்டே மாதங்களில்) 500 கோடி டாலர் (சுமார் ரூ.36,000 கோடி) குறைந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவின் சொத்து மதிப்பு 88 கோடி டாலர் சரிந்துள்ளது. அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 87 கோடி டாலர் குறைந்து இருக்கிறது.

Next Story