வாகனங்கள் விற்பனை - பிப்ரவரி நிலவரம்


வாகனங்கள் விற்பனை - பிப்ரவரி நிலவரம்
x
தினத்தந்தி 4 March 2020 9:15 AM GMT (Updated: 4 March 2020 9:15 AM GMT)

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 40,624 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

புதுடெல்லி

பிப்ரவரி மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வருமாறு:-

டாட்டா மோட்டார்ஸ்

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 40,624 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் உள்நாட்டில் 38,002 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 57,221-ஆக இருந்தது. ஆக விற்பனை 32 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை 33 சதவீதம் குறைந்து 28,086-ஆக இருக் கிறது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது.

சுசுகி மோட்டார்சைக்கிள்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், மொத்தம் 67,961 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 65,630-ஆக இருந்தது. இதில் உள்நாட்டில் 58,644 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 57,174-ஆக இருந்தது. ஆக, விற்பனை 2.5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஏற்றுமதி 9,317-ஆக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (2019 ஏப்ரல்-2020 பிப்ரவரி) இந்நிறுவனம் மொத்தம் 7,49,755 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

எஸ்கார்ட்ஸ்

எஸ்கார்ட்ஸ் நிறுவனம் 8,601 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 7,240-ஆக இருந்தது. ஆக, விற்பனை 18 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் டிராக் டர்கள் விற்பனை 16 சதவீதம் உயர்ந்து (6,918-ல் இருந்து) 8,049-ஆக இருக்கிறது. ஏற்றுமதி 71 சதவீதம் அதிகரித்து 552 டிராக்டர்களாக இருக் கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 322-ஆக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (2019 ஏப்ரல்-2020 பிப்ரவரி), இந்நிறுவனம் மொத்தம் 80,574 டிராக்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.7 சதவீதம் குறைவாகும். அப்போது அது 84,507-ஆக இருந்தது. உள்நாட்டில் இதன் விற்பனை 5.9 சதவீதம் குறைந்து 77,024-ஆக உள்ளது. ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரித்து 3,550-ஆக உள்ளது.

ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், உள்நாட்டில் மொத்தம் 7,269 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 46 சதவீத சரிவாகும். அப்போது விற்பனை 13,527-ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 64-ஆக இருக்கிறது.

சென்ற 2018-19-ஆம் நிதி ஆண்டில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,83,787-ஆக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 1,70,026-ஆக இருந்தது.

ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு நிறுவனம், ஏற்றுமதி உள்பட மொத்தம் 63,536 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 62,536-ஆக இருந்தது. ஆக விற்பனை சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்து 2,348-ஆக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2,564-ஆக இருந்தது. உள்நாட்டில் இதன் விற்பனை 2 சதவீதம் அதிகரித்து (60,066-ல் இருந்து) 61,188-ஆக உயர்ந்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story