சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : பியூஜி பிலிமின் ‘எக்ஸ்.100 வி’ + "||" + Fujifilm X100V

வானவில் : பியூஜி பிலிமின் ‘எக்ஸ்.100 வி’

வானவில் : பியூஜி பிலிமின் ‘எக்ஸ்.100 வி’
கேமரா உள்ளிட்ட புகைப்படம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பியூஜி பிலிம் நிறுவனம் ‘எக்ஸ்.100 வி’ கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
மிக உயரிய வடிவமைப்பு, சிறப்பான செயல்பாடு, பழைய கால கேமராவைப் போல வியூ பைண்டர் மூலம் காட்சிகளை படமெடுக்கும் வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். தற்போதைய கேமராக்களில் பின்பகுதியில் உள்ள மானிட்டரில் காட்சிகள் தெரிகின்றன.

இதில் உயர் செயல் திறன் கொண்ட லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன இமேஜ் உணர் கருவி மற்றும் காட்சிப் பதிவு பிராசஸிங் என்ஜின் ஆகியன இணைந்து உயர் தரத்திலான வண்ணமயமான தத்ருபமான படங்களைத் தருகின்றன. பிரீமியம் காம்பாக்ட் கேமரா பிரிவில் இதை நிலை நிறுத்த பியூஜி பிலிம் இந்தக் கேமராவை உருவாக்கியுள்ளது. தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் இதன் செயல்பாடு அமைந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ. 1.05 லட்சம்.

ஆசிரியரின் தேர்வுகள்...