மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர் வேலை - 242 காலியிடங்கள்


மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர் வேலை - 242 காலியிடங்கள்
x
தினத்தந்தி 16 March 2020 9:50 AM GMT (Updated: 16 March 2020 9:50 AM GMT)

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர் உள்பட பல்வேறு பணிகள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 242 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுருக்கமாக டி.என்.பி.சி.பி. (TNPCB) எனப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர், உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 242 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

உதவி என்ஜினீயர் பணிக்கு 78 இடங்களும், என்விரான்மென்டல் சயின்டிஸ்ட் பணிக்கு 70 இடங்களும், அசிஸ்டன்ட் பணிக்கு 38 இடங்களும், டைப்பிஸ்ட் பணிக்கு 56 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 12-2-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

சிவில், கெமிக்கல், என்விரான்மென்டல் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்புடன் முதுநிலை தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோர் ரூ.250-ம், மற்றவர்கள் ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 26-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.tnpcb.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story