சிறப்புக் கட்டுரைகள்

நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.25% சரிவு + "||" + Crude oil production fell by 6.25% in the first 10 months of the financial year

நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.25% சரிவு

நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.25% சரிவு
நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2019 ஏப்ரல்-2020 ஜனவரி) கச்சா எண்ணெய் உற்பத்தி 6.25 சதவீதம் சரிவடைந்துள்ளது.
புதுடெல்லி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு      

80 சதவீத பங்கு

இந்தியாவில் ஓ.என். ஜி.சி., ஆயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈட்டுபட்டு வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது.

நம் நாட்டில், நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 2.70 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 2.88 கோடி டன்னாக இருந்தது. ஆக உற்பத்தி 6.25 சதவீதம் குறைந்துள்ளது. இதில், பொதுத்துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உற்பத்தி 2.8 சதவீதம் சரிந்து (1.77 கோடி டன்னில் இருந்து) 1.72 கோடி டன்னாக குறைந்து இருக்கிறது. ஆயில் இந்தியாவின் எண்ணெய் உற்பத்தி 26 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 5.74 சதவீத சரிவாகும். தனியார் நிறுவனங்களின் உற்பத்தி 73 லட்சம் டன்னாக இருக்கிறது.

ஜனவரி மாதத்தில் மட்டும் 27 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 28 லட்சம் டன்னாக இருந்தது. இதில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உற்பத்தி ஏறக்குறைய 1.25 சதவீதம் சரிந்து 17.66 லட்சம் டன்னாக குறைந்து இருக் கிறது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 3.70 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் 3.42 கோடி டன் மட்டுமே உற்பத்தி ஆனது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 4 சதவீத சரிவாக இருந்தது.

ஈரான், ஈராக்

சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இந்தியாவிற்கு ஈராக் நாடு 2.60 கோடி டன் எண்ணெய் சப்ளை செய்துள்ளது. இதன்படி அந்த நாடு முதலிடத்தில் உள்ளது. சவுதி அரேபியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டின் சப்ளை 2.07 கோடி டன்னாக இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி 5.8 சதவீதம் சரிவடைந்தது; இறக்குமதிக்கான தேவை அதிகரிக்கிறது
நம் நாட்டில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங் களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) கச்சா எண்ணெய் உற்பத்தி 5.8 சதவீதம் சரிவடைந்துள்ளது. எனவே எண்ணெய் இறக்குமதிக்கான தேவையும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
2. பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது ; இறக்குமதிக்கான தேவை அதிகரிக்கிறது
பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இறக்குமதிக்கான தேவையும் அதிகரித்தபடி உள்ளது.