சிறப்புக் கட்டுரைகள்

சென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது; டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி + "||" + Top 10 corporate stocks fell by Rs 4.22 lakh crore in last week's trade; A large decline in the value of the shares of TCS

சென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது; டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி

சென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது; டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி
சென்ற வார வர்த்தகத்தில், டாப் 10 பட்டியலில் அனைத்து நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.4.22 லட்சம் கோடி சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) பங்குகளின் மதிப்பு அதிக வீழ்ச்சி கண்டது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு      

மும்பை

குறியீட்டு எண்கள்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 3,473.14 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1,034.25 புள்ளிகள் இறங்கியது. அந்த நிலையில், டாப் 10 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.4.22 லட்சம் கோடி சரிந்தது.

அதில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.1.16 லட்சம் கோடி குறைந்து ரூ.6.78 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்குகளின் மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி சரிந்து ரூ.7.01 லட்சம் கோடியாக குறைந்தது.

இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.41,315 கோடி குறைந்து ரூ.2.73 லட்சம் கோடியாக சரிந்தது. எச்.டீ.எப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.34,919 கோடி சரிந்து ரூ.5.87 லட்சம் கோடியாக குறைந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகளின் மதிப்பு ரூ.33,308 கோடி குறைந்து ரூ.4.40 லட்சம் கோடியாக இருந்தது. கோட்டக் மகிந்திரா வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.30,931 கோடி சரிந்து ரூ.2.81 லட்சம் கோடியாக குறைந்தது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.25,098 கோடி குறைந்து ரூ.2.89 லட்சம் கோடியாக சரிந்தது. பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.16,320 கோடி இறங்கி ரூ.2.37 லட்சம் கோடியாக இருந்தது. பார்தி ஏர்டெல் பங்குகளின் மதிப்பு ரூ.13,611 கோடி சரிந்து ரூ.2.69 லட்சம் கோடியாக இருந்தது. எச்.டீ.எப்.சி. நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.7,010 கோடி குறைந்து ரூ.3.58 லட்சம் கோடியாக சரிந்தது.