சிறப்புக் கட்டுரைகள்

பங்குச்சந்தை பட்டியலில் எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ்முதல் நாளில் பங்கு விலை 9.51% குறைந்தது + "||" + In the Stock Exchange list SBI Cards

பங்குச்சந்தை பட்டியலில் எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ்முதல் நாளில் பங்கு விலை 9.51% குறைந்தது

பங்குச்சந்தை பட்டியலில் எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ்முதல் நாளில் பங்கு விலை 9.51% குறைந்தது
எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.
மும்பை

எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இப்பங்கு விலை 9.51 சதவீதம் குறைந்தது.

பண அட்டைகள்

பண அட்டைகள் வணிகத்தில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. இந்த வெளியீடு கடந்த 2-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி நிறைவடைந்தது. அதில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.750-755-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. வெளியீட்டில் ரூ.500 கோடிக்கு புதிய பங்குகள் வெளியிடப்பட்டன. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் 3.73 கோடி பங்குகளும், கார்லைல் குழுமத்தின் 9.32 கோடி பங்குகளுமாக ஏறக்குறைய 13 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.

அந்த நிலையில், வெளியீட்டு அளவைக் காட்டிலும் 22 மடங்கு அதிக பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.1.75 லட்சம் கோடியாகும். ஆக, சந்தை நிலவரங்கள் சரியில்லாத நிலையிலும் இவ்வெளியீடு மகத்தான வெற்றி பெற்றது. பின்னர் நிறுவனப் பங்கின் விலை ரூ.755-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பட்டியலிட்ட தினத்தில் இதன் விலையில் 13 சதவீதம் தள்ளுபடி செய்து ரூ.658-ஆக இருந்தது.

அந்த வெளியீட்டை கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், டீ.எஸ்.பீ. மெரில் லின்ச், எச்.எஸ்.பீ.சி. செக்யூரிட்டீஸ் அண்டு கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் (இந்தியா), நோமுரா பைனான்சியல் அட்வைசரி அண்டு செக்யூரிட்டீஸ் (இந்தியா), எஸ்.பீ.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்தன.

பட்டியலிடப்பட்டன

எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குகள் நேற்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டபோது இப்பங்கு ரூ.658-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.755-க்கு சென்றது. இறுதியில் ரூ.683.20-ல் நிலைகொண்டது. வெளியீட்டு விலையுடன் (ரூ.755) ஒப்பிடும்போது இது 9.51 சதவீத சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டபோது இப்பங்கு ரூ.661-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.755-க்கும், குறைந்தபட்சமாக ரூ.656-க்கும் சென்றது. இறுதியில் 9.74 சதவீதம் குறைந்து ரூ.681.40-ல் நிலைகொண்டது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு