சிறப்புக் கட்டுரைகள்

பிப்ரவரி மாதத்தில்மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக குறைந்தது + "||" + In the month of February Wholesale price inflation It was down to 2.26 per cent

பிப்ரவரி மாதத்தில்மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக குறைந்தது

பிப்ரவரி மாதத்தில்மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக குறைந்தது
பிப்ரவரி மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் (2020 ஜனவரி) அது 3.1 சதவீதமாக இருந்தது.
புதுடெல்லி

பிப்ரவரி மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் (2020 ஜனவரி) அது 3.1 சதவீதமாக இருந்தது.

கொள்கை முடிவுகள்

பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இவ்வங்கி முன்பு மொத்த விற்பனை விலை பணவீக்கம் அடிப்படையில் தனது முடிவுகளை எடுத்து வந்தது. ஆனால் இப்போது சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல் 2019) மொத்த விலை பணவீக்கம் 3.07 சதவீதமாக இருந்தது. மே மாதத்தில் அது 2.45 சதவீதமாக குறைந்தது. ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாக மேலும் குறைந்தது. ஜூலையில் 1.08 சதவீதமாக குறைந்தது. ஆகஸ்டில் 1.08 சதவீதமாக மாற்றம் எதுவும் இன்றி இருந்தது. செப்டம்பரில் 0.33 சதவீதமாக குறைந்தது. அக்டோபரில் 0.16 சதவீதமாக குறைந்தது. நவம்பரில் 0.58 சதவீதமாக உயர்ந்தது. டிசம்பர் மாதத்தில் 2.59 சதவீதமாக அதிகரித்தது. ஜனவரியில் 3.1 சதவீதமாக உயர்ந்தது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் இப்பணவீக்கம் 2.26 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2.93 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள்கள் பிரிவில் மொத்த விலை பணவீக்கம் 7.79 சதவீதமாக குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 11.5 சதவீதமாக இருந்தது.

சி.பி.ஐ.

2012 ஜனவரி மாதத்தில் இருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் (சி.பி.ஐ) எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம் கிராமம், நகரம் மற்றும் நாடு (நகரங்களும், கிராமங்களும்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.

சில்லரை விலை பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.58 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரியில் அது 7.59 சதவீதமாக இருந்தது. நடப்பு நான்காவது காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) இப்பணவீக்கம் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என பாரத ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்து இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு