பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்ட நிலையிலும் யெஸ் வங்கி பங்கு விலை 45 சதவீதம் ஏற்றம்

பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்ட நிலையிலும் யெஸ் வங்கி பங்கு விலை 45 சதவீதம் ஏற்றம்
x
தினத்தந்தி 17 March 2020 11:00 AM GMT (Updated: 17 March 2020 11:00 AM GMT)

சர்வதேச மற்றும் இந்திய பங்குச்சந்தைகள் மோசமான சரிவை சந்தித்த நிலையிலும், நேற்று யெஸ் வங்கி பங்கு 45 சதவீதம் அதிகரித்து ரூ.37.10-க்கு விலைபோனது.

ங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்ட நிலையிலும் நேற்று யெஸ் வங்கி பங்கு விலை 45 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச மற்றும் இந்திய பங்குச்சந்தைகள் மோசமான சரிவை சந்தித்த நிலையிலும், நேற்று யெஸ் வங்கி பங்கு 45 சதவீதம் அதிகரித்து ரூ.37.10-க்கு விலைபோனது.

இந்நிறுவனம் 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.18,564 கோடியை இழப்பாகக் கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் இவ்வங்கி ரூ.1,000 கோடி லாபம் ஈட்டி இருந்தது. முந்தைய காலாண்டில் அதன் இழப்பு ரூ.629 கோடியாக இருந்தது. கணக்கீட்டுக் காலத்தில் இவ்வங்கியின் மொத்த வாராக்கடன் (2.10 சதவீதத்தில் இருந்து) 18.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர வாராக்கடன் 5.97 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கியபோது யெஸ் வங்கிப் பங்கு ரூ.23.15-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.40.40-க்கு சென்றது. இறுதியில் ரூ.37.10-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும்.

Next Story