சிறப்புக் கட்டுரைகள்

சென்செக்ஸ் பட்டியலில்இண்டஸ் இந்த் வங்கி பங்கு அதிகபட்ச சரிவு + "||" + In the Sensex list IndusInd Bank Stock The maximum slope

சென்செக்ஸ் பட்டியலில்இண்டஸ் இந்த் வங்கி பங்கு அதிகபட்ச சரிவு

சென்செக்ஸ் பட்டியலில்இண்டஸ் இந்த் வங்கி பங்கு அதிகபட்ச சரிவு
மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது இண்டஸ் இந்த் வங்கி பங்கு ரூ.750-க்கு கைமாறியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் நேற்று இண்டஸ் இந்த் வங்கி பங்கு அதிகபட்ச சரிவு கண்டது.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது இண்டஸ் இந்த் வங்கி பங்கு ரூ.750-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.758.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.655-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.663.30-ல் நிலைகொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 17.50 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் 30 பட்டியலில் இண்டஸ் இந்த் வங்கியை அடுத்து டாட்டா ஸ்டீல் பங்கு 11.02 சதவீதம் வீழ்ந்தது. எச்.டீ.எப்.சி. மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் முறையே 10.94 சதவீதம் மற்றும் 10.38 சதவீதம் இறங்கின. அந்த நிலையில் பஜாஜ் ஆட்டோ பங்கு விலை குறைந்தபட்சமாக 0.97 சதவீத சரிவை சந்தித்தது.