சிறப்புக் கட்டுரைகள்

வர்த்தகம் எழுந்து வீழ்ந்த நிலையில்சென்செக்ஸ் 812 புள்ளிகள் இழப்புநிப்டி 230 புள்ளிகள் இறங்கியது + "||" + The Sensex lost 812 points The Nifty landed 230 points

வர்த்தகம் எழுந்து வீழ்ந்த நிலையில்சென்செக்ஸ் 812 புள்ளிகள் இழப்புநிப்டி 230 புள்ளிகள் இறங்கியது

வர்த்தகம் எழுந்து வீழ்ந்த நிலையில்சென்செக்ஸ் 812 புள்ளிகள் இழப்புநிப்டி 230 புள்ளிகள் இறங்கியது
செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் எழுந்து வீழ்ந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 812 புள்ளிகளை இழந்தது.
மும்பை

செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் எழுந்து வீழ்ந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 812 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 230 புள்ளிகள் இறங்கியது.

அன்னிய முதலீடு

அதிக அளவில் அன்னிய முதலீடு வெளியேறியதும், இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்ததும் பங்குச்சந்தைகள் சரிய காரணமாக இருந்தது. மேலும் ஐரோப்பிய சந்தைகள் நேற்று கடுமையாக வீழ்ந்ததும், கொரோனா வைரஸ் பீதி போன்ற காரணங்களும் அதில் முக்கிய பங்கு வகித்தன.

பங்கு வியாபாரம் சரிந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று வங்கி துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 4.46 சதவீதம் குறைந்தது. அடுத்து தொழில்நுட்ப துறை குறியீட்டு எண் 3.27 சதவீதம் சரிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 9 பங்குகளின் விலை உயர்ந்தது. 21 பங்குகளின் விலை சரிவடைந்தது.

இந்தப் பட்டியலில் இந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோகார்ப், ஏஷியன் பெயிண்ட், பவர் கிரிட், மாருதி சுசுகி, ஐ.டி.சி. உள்ளிட்ட 9 பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதே சமயம் ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.டீ.எப்.சி., இன்போசிஸ், கோட்டக் மகிந் திரா வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய 21 பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 810.98 புள்ளிகள் சரிவடைந்து 30,579.09 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 32,047.98 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 30,394.94 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 751 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,677 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 167 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,902 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.2,667 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 230.35 புள்ளிகள் இறங்கி 8,967.05 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 9,403.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 8,915.60 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு