2020-ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் மூடிஸ் இன்வெஸ்டர் மறுமதிப்பீடு


2020-ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் மூடிஸ் இன்வெஸ்டர் மறுமதிப்பீடு
x
தினத்தந்தி 18 March 2020 10:41 AM GMT (Updated: 18 March 2020 10:41 AM GMT)

2018 காலண்டர் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. 2019-ல் அது 5.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டப்பு 2020-ஆம் ஆண்டில், பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் மறுமதிப்பீடு செய்துள்ளது.

வேளாண் விளைபொருள்கள் உள்பட நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) எனப்படுகிறது. இதுவே பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் அளவுகோலாக இருக்கிறது.

2018 காலண்டர் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. 2019-ல் அது 5.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020-ஆம் ஆண்டில் எந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்களும் மதிப்பீடுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் நடப்பு ஆண்டில் (2020) பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்துள்ளது. முதலில் அது 6.6 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து இருந்தது. மேலும் இந்நிறுவனம் எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்து இருக்கிறது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறைந்து இருந்தது. அது 5 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாக இருந்தது. இந்நிலையில், 2019-20-ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகளை பல்வேறு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய பொருளாதார குறியீடுகளை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு தற்போது 2011-12-ஆக இருக்கிறது. அடுத்த அடிப்படை ஆண்டை 2017-18-ஆக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Next Story