சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : லாஜிடெக் 3 இன் 1 வயர்லெஸ் சார்ஜர் + "||" + Vanavil :Logitech 3-in-1 wireless charger

வானவில் : லாஜிடெக் 3 இன் 1 வயர்லெஸ் சார்ஜர்

வானவில் : லாஜிடெக் 3 இன் 1 வயர்லெஸ் சார்ஜர்
மின்னணு பாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் லாஜிடெக் நிறுவனம் தற்போது மூன்று பணிகளை நிறைவேற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐ-போன், ஆப்பிள் கடிகாரம், ஏர்பாட் உள்ளிட்ட மூன்றையும் ஒரே சார்ஜிங் ஸ்டேஷனில் இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இதில் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பகுதிகளும் ஒரு வயர் இணைப்பு சார்ஜிங் வசதியும் கொண்டது. வயர் பகுதியில் ஸ்மார்ட்போனையும், வயர்லெஸ் பகுதியில் ஏர்பாட் மற்றும் ஸ்மார்ட் கடிகாரத்தை சார்ஜ் செய்து கொள்ளலாம். வயர்லெஸ் சார்ஜிங் பகுதியானது கியூ-ஐ சார்ஜிங் தரத்திலானவை.

இதில் கேலக்ஸி எஸ் 20 உள்ளிட்டவற்றையும் சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.9,250. இத்துடன் தனியாக வயர்லெஸ் சார்ஜிங் சாதனத்தையும் வெளியிட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,250. இது தவிர டேபிளில் வைக்கும் தட்டையான வயர்லெஸ் சார்ஜிங் பேடையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,750. இவை அனைத்துமே ஆப்பிள் சாதனங்களை சார்ஜ் செய்ய ஏற்றவை. அதற்கேற்ப 7.5 வாட் திறன் கொண்டவை.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில்: பவர் பேங்க் உள்ள வயர்லெஸ் சார்ஜர்
இந்த ஸ்மார்ட் உலகில் ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுமே அவற்றில் பேட்டரி சார்ஜ் உள்ளவரைதான் இயங்கும்.