சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ‘சூகாஸ் எக்ஸ் 3 யு’ எலெக்ட்ரிக் டூத் பிரஷ் + "||" + Vanavil : Sukas X3 Utility Electric Toothbrush

வானவில் : ‘சூகாஸ் எக்ஸ் 3 யு’ எலெக்ட்ரிக் டூத் பிரஷ்

வானவில் : ‘சூகாஸ் எக்ஸ் 3 யு’ எலெக்ட்ரிக் டூத் பிரஷ்
ஜியோமி நிறுவனம் தற்போது ‘சூகாஸ் எக்ஸ் 3 யு’ என்ற பெயரிலான மின்சார டூத் பிரஷ்ஷை அறிமுகப்படுத்திஉள்ளது. பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட் பிரஷ்ஷின் விலை சுமார் ரூ.2,500 முதல் ரூ.3,250 வரையாகும்.
தற்போது வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டதாக  இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  பயணத்தின்போது எடுத்துச் செல்ல வசதியாக இதற்கான பெட்டி அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்காந்த சுழற்சியில் செயல்படும் மோட்டார் இதில் உள்ளது.

தற்போது இந்த பிரஷ்ஷுடன் கூடுதலாக இரண்டு தலைப் பகுதி அளிக்கப்படுகிறது. நீர்புகா பாதுகாப்பு தன்மை உள்ளதால் இதில் உள்ள மோட்டால் கெட்டுப் போகாமல் நீடித்து உழைக்கும். 1,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ள சார்ஜிங் போர்ட் உள்ளதால் அதன் மூலம் டூத் பிரஷ்ஷை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.