சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : வியூசோனிக்கின் நவீன புரொஜெக்டர் + "||" + Vanavil : Modern Projector of VioSonic

வானவில் : வியூசோனிக்கின் நவீன புரொஜெக்டர்

வானவில் : வியூசோனிக்கின் நவீன புரொஜெக்டர்
வியூசோனிக் நிறுவனம் அதி நவீன புரொஜெக்டர்களில் 3 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வியூசோனிக் எக்ஸ் 100 4-கே, எம் 2 மற்றும் எல்.எஸ் 60 டபிள்யூ.யு. என்ற பெயர்களில் வந்துள்ள இந்த புரொஜெக்டர்களின் விலை சுமார் ரூ.98 ஆயிரத்தில் ஆரம்பமாகிறது.
வியூசோனிக் எக்ஸ் 100 4-கே இது நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இதன் வெளிச்ச அளவு 2,900 லுமென்ஸ் ஆகும். இது ஹெச்.டி.ஆர். வீடியோ காட்சிகளையும் மிக அழகாக படம் பிடித்து வெளிப்படுத்தும். இதன் மூலம் காட்சிகளை அதிகபட்சம் 300 அங்குலம் வரை புரொஜெக்ட் செய்து பார்க்க முடியும். இதில் உள்ளடாக ஹர்மான் கார்டோன் ஸ்பீக்கர்கள் உள்ளது.

இதனால் இசை மற்றும் காட்சிகள் குறித்த விளக்கங்களைப் பெற தனித்து ஆடியோ சிஸ்டம் எதுவும் தேவைப்படாது. வை-பை இணைப்பு மூலமும் செயல்படுத்த முடியும். கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்ஸா உள்ளிட்டவற்றின் மூலம் செயல்படுத்தலாம். இதன் விலை ரூ.3.85 லட்சமாகும். ஜூன் மாதம் இது விற்பனைக்கு வர உள்ளது.

வியூசோனிக் எம் 2: இது போர்ட்டபிள் மாடல் புரொஜெக்டர். இதனால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். எடை குறைவாக எளிய வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 16 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. இதில் யு.எஸ்.வி. 2.0, யு.எஸ்.பி.சி., ஆடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்டு உள்ளிட்ட இணைப்பு வசதிகள் உள்ளன.

இது 1,200 எல்.இ.டி. லுமென் வசதி உள்ளது. இதில் சினிமா சூபர்ப் கலர் பிளஸ் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதில் முப்பரிமாண படங்களை புரொஜெக்ட் செய்யும் வசதியும் உள்ளது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.98 ஆயிரமாகும்.

வியூசோனிக் எல்.எஸ் 860 டபிள்யூ.யு: இது 5,000 ஏ.என்.எஸ்.ஐ. லுமென்ஸ் மற்றும் குறுகிய தொலைவு புரொஜெக்டராகும். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த பாஸ்பர் தொழில்நுட்பம் கொண்ட இது அதிக வெப்பத்தை தாங்கக் கூடியது. இதனால் இதை நீண்ட நேரம் செயல்படுத்த முடியும். தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.3.5 லட்சம்.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : எக்ஸ்மேட் லூனா புரொஜெக்டர்
நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் எக்ஸ்மேட் நிறுவனம் தற்போது லூனா 2.0 என்ற பெயரிலான ஹெச்.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
2. வானவில் :ஆப்டோமா அல்ட்ரா புரொஜெக்டர்
புரொஜெக்டர் மற்றும் ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள அப்டோமா நிறுவனம் 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத்தும் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில் : ஏசர் போர்ட்டபிள் எல்.இ.டி. புரொஜெக்டர்
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் பி.250 ஐ என்ற பெயரில் புதிய எல்.இ.டி. போர்ட்டபிள் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.