வானவில் :ஜியோமியின் ஸ்மார்ட் விளக்கு


வானவில் :ஜியோமியின் ஸ்மார்ட் விளக்கு
x
தினத்தந்தி 18 March 2020 11:12 AM GMT (Updated: 18 March 2020 11:12 AM GMT)

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் விளக்கை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்  விளக்கானது இரட்டை பயன்பாடுகளைக் கொண்டது. வீட்டு படுக்கையறையின் மேல் கூரை மீது இந்த விளக்கை பொறுத்திவிட்டால் போதும். இதில் உள்ள விளக்கை தேவையான போது ரிமோட் மூலம் செயல்படுத்தலாம். குளிர் காலங்களில் கடும் குளிரிலும் நிம்மதியான தூக்கத்திற்கு இந்த ஸ்மார்ட் விளக்கு உதவும். வெப்பக்காற்றை வெளியிட இதில் தனியான மோட்டார் ஏதும் இல்லை.

இதனால் மோட்டார் வேலை செய்யும் சத்தம் உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும் என்ற அச்சம் ஏற்படுவது இயல்பே. ஆனால் இந்த ஸ்மார்ட் விளக்கின் உள்ளே மோட்டார் ஏதும் கிடையாது. வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடிய பிளேட் மட்டுமே உள்ளது. ஸ்மார்ட் விளக்கை ஆன் செய்த உடனேயே இது செயல்பட ஆரம்பிக்கும். அறையினுள் நிலவும் குளிர்ச்சியை போக்கி நிம்மதியாக தூங்க உதவும். இதன் விலை சுமார் ரூ.20,500. 

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காலங்களில் ஏற்படும் குளிர்ச்சியிலிருந்து தப்பிக்க இந்த ஸ்மார்ட் விளக்கு நிச்சயம் உதவும். இத்தகையோர் ஜியோமி தயாரிப்புக்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டியதுதான்.

Next Story