சிறப்புக் கட்டுரைகள்

பொறியியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு + "||" + Employment at Engineering Company

பொறியியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

பொறியியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மத்திய பொறியியல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 169 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று ஹெவி என்ஜினீயரிங் கார்ப்பரேசன் லிமிடெட் (எச்.இ.சி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், இண்டஸ்ட்ரியல், மெட்டலர்ஜிக்கல், செகரெட்டேரியல் பிராக்டிஸ் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

பணியிடங்கள் உள்ள பிரிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் 29-2-2020-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பி வைக்கலாம். ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம் தேவையான சான்றுகளுடன் மார்ச் 31-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். ஏப்ரல் 27-ந் தேதி கவுன்சலிங் நடத்தி தகுதியானவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.hecltd.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.