சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான் + "||" + Employment News: The call is for you

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னீசியன், அசிஸ்டன்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இஸ்ரோ

இஸ்ரோவின் கீழ் செயல்படும் ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டர் எனப்படும் ஆராய்ச்சி பிரிவு அகமதாபாத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர், என்ஜினீயர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 55 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னீசியன், அசிஸ்டன்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர், என்ஜினீயர் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.sac.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனம் சுருக்கமாக இ.சி.ஐ.எல். எனப்படுகிறது. இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது பொது மேலாளர் (டெக்னிக்கல்), முதுநிலை துணைப்பொது மேலாளர், துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர், தனி அதிகாரி, கணக்கு அதிகாரி உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன், குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.ecil.co.in, http://careers.ecil.co.in ஆகிய இணையதளங்களில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

ஏப்ரல் 10-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அதிலிருந்து ஒரு வார காலத்திற்குள் நகல் விண்ணப்பம் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.

ஐ.சி.சி.ஆர்.

இந்திய கலாசார தொடர்புத்துறை கவுன்சில் சுருக்கமாக ஐ.சி. சி.ஆர். எனப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் திட்ட அதிகாரி, உதவித் திட்ட அதிகாரி, உதவியாளர், சீனியர் ஸ்டெனோகிராபர், ஜூனியர் ஸ்டெனோகிராபர், எல்.டி.சி. போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பணிக்கும் என்னென்ன கல்வித்தகுதி, வயது வரம்புடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். வயது வரம்பு தளர்வு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்களை e https://iccr.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 8-ந் தேதியாகும்.

வானிலை நிறுவனம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள பாஷான், அருகே ஐ.ஐ.டி.எம். எனும் வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது. தற்போது இந்த ஆய்வு மையத்தில் நிர்வாக இயக்குனர், திட்ட ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் சார்ந்த பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், இது பற்றிய விரிவான விவரங்களை https://www.tropmet.res.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

மின்தொகுப்பு நிறுவனம்

மத்திய மின் தொகுப்பு நிறுவனமான பி.ஜி.சி.ஐ.எல். நிறுவனத்தில் தற்போது எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி. டபுள்யு.ஏ. போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.powergridindia.com/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 6-ந் தேதியாகும்.