மருந்து ஆராய்ச்சி கவுன்சிலில் 150 பணிகள்


மருந்து ஆராய்ச்சி கவுன்சிலில் 150 பணிகள்
x
தினத்தந்தி 23 March 2020 10:21 AM GMT (Updated: 23 March 2020 10:21 AM GMT)

மருந்து ஆராய்ச்சி கவுன்சிலில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுருக்கமாக ஐ.சி.எம்.ஆர். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, பணிக்கு 150 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு 30-9-2020-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் எம்.எஸ்சி., எம்.ஏ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். சோசியல் சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, ஹோம்சயின்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் ஆன்ந்ரோபாலஜி, சோசியல் ஒர்க், பப்ளிக் ஹெல்த், ஹெல்த் எக்னாமிக்ஸ் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.1500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.1200 கட்டணம் செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 27-ந் தேதி தொடங்குகிறது. மே 27-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் : https://icmr.nic.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story