உலக செய்திகள்

கிம் ஜாங் உன் நிலை என்ன? வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் போட்டி ஆரம்பம்? + "||" + Kim Jong Uns Sidelined Uncle Suddenly Relevant After 4 Decades Abroad

கிம் ஜாங் உன் நிலை என்ன? வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் போட்டி ஆரம்பம்?

கிம் ஜாங் உன் நிலை என்ன? வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் போட்டி ஆரம்பம்?
கிம் ஜாங் உன் நிலை என்ன என்பது குறித்து வெளி உலகிற்கு தெரியாத நிலையில்,வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி ஆரம்பமாகி உள்ளது.
சியோல்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிபடுத்தாத பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கிம் ஜாங்  மரணமடைந்தார் என்ற ஊகத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வெவ்வேறாக உள்ளன. இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொன்று ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இன்னொன்று கடற்கரையில் நடக்க சென்ற கிம் ஜாங் மாரடைப்பால் குப்புற சரிந்தார் எனவும், அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ளது.

கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறார், ஆனால் நடக்கவோ எழுந்து நிற்கவோ முடியவில்லை என வட கொரியாவின் முன்னாள் தூதர் ஒருவர் கூறி உள்ளார். மேலும் அவரது உண்மையான நிலையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே நபர்கள் கிம் ஜாங் உன்னின் மனைவி அல்லது அவரது சகோதரி அல்லது அவரது நெருங்கிய உதவியாளர்கள் மட்டுமே என கூறினார்.

இருப்பினும் அண்டை நாடான தென் கொரியா, கிம் ஜாங் ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் உள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் உன் குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில்  வடகொரியாவில் அடுத்து யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிம் ஜாங் உன்னின் மனைவி மற்றும் சகோதரி இவர்களில் ஒருவர் ஆட்சியை பிடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கிம் ஜாங் உன்னின் மாமாவும் இந்த போட்டியாளர்களில் இணைந்து உள்ளார்.   

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் மாமா கிம் பியோங் இல் 40 ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டு வெளிநாட்டில் வசித்து வந்தார். வடகொரிய தலைவர் கிங் ஜாங் உன் குறித்து பல்வேறு தகவல்கள் குறித்து உலவி வரும் நிலையில் ஓரங்கட்டப்பட்ட மாமா திடீரென்று வெளிச்சத்துக்கு வந்து உள்ளார்.

கிம் பியோங் இல் (65) வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் கடைசி மகன் ஆவார். 1970 களில் தனது  சகோதரரான கிம் ஜாங் இல். 1994 முதல் 2011 வரை நாட்டை ஆட்சி செய்து  மரணமடைந்த பின்னர்  கிம் பியோங் இல் சுமார் 40 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஹங்கேரி, பல்கேரியா, பின்லாந்து, போலந்து மற்றும் கடந்த ஆண்டு பியோங்யாங்கிற்கு திரும்புவதற்கு முன் செக் குடியரசில் வசித்து வந்தார். தற்போது  வீட்டு காவலில் உள்ளார்

கிம் பியோங் இல் திறம்பட ஓரங்கட்டப்பட்ட போதிலும் தற்போது தலைமை போட்டிக்கு ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்த உள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக வாரிசை அறிவிக்கவில்லை. 

கிம் பியோங் இல் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன்னின் தந்தையின் சகோதரர் என்பதால் அவருக்கு ஆட்சிக்கு உரிமை கோரா வாய்ப்பு உண்டு.

பியோங்யாங்கில் உள்ள பழமைவாத  தலைவர்கள் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்கிற்கு அதிகாரம் கொடுப்பதை எதிர்ப்பார்கள்.  கிம் ஜாங் உன்னின் சகோதரி கடந்த சில ஆண்டுகளாக கிம் ஜாங் உன்னிற்கு  ஆட்சியில் உதவி வருகிறார்.

பிரச்சினை என்னவென்றால், கிம் யோ ஜாங் தலைமையிலான  ஆட்சியில் வட கொரியா நிலையானதாக இருக்க வாய்ப்பில்லை. அவருடன் கூட்டுத் தலைமை தலைவராக இருப்பதால் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். இதைத் தவிர்ப்பதற்காக, தலைமையில் சிலர் இப்போது வீட்டுக் காவலில் இருக்கும் கிம் பியோங் இல்லை அதிகார மையத்திற்கு கொண்டு வர முயற்சிப்பார்கள்.

கிம் பியோங் இல் ஆட்சியைப் பிடித்தால், அவருடைய செல்வாக்கை அடக்குவதற்கு பல தசாப்தங்களாக உழைத்தபின், தற்போதைய உயர் தலைமையில் இருக்கும் தலைவர்கள் முயற்சிப்பார்கள்.

2011 ஆம் ஆண்டில் தனது தந்தை இறந்த பிறகு கிம் ஜாங் உன் ஆட்சியைப் பிடித்தபோது, அவர் தனது  போட்டியாளர்களை அகற்றினார். அவர் தனது மாமா மற்றும் துணைத் தலைவரான ஜாங் சாங் தேக்கை தூக்கிலிட்டார், மேலும் நாடுகடத்தப்பட்ட அவரது மூத்த சகோதரரான கிம் ஜாங் நாம்  படுகொலைக்கு கிம் உத்தரவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் கிம் பியோங் இல் ஆளும் குடும்பத்தில் இருந்த அகற்றப்படுபவர்களில் இருந்து தப்பினார. கிம் ஜாங் உன் அவரை ஒருபோதும் போட்டியாளராகப் பார்த்ததில்லை, அவரை வெளிநாட்டு சேவையிலும் பல ஆண்டுகளாக கை எட்டும் தூரத்தில் வைத்திருந்தார் என்பதைக் கவனிக்கலாம். 2015 ஆம் ஆண்டில், செக் குடியரசின் வட கொரியாவின் தூதராக அவர் பெயரிடப்பட்டார், மேலும் 2017 ஆம் ஆண்டில் கிம் ஜாங் நாம் கொலை செய்யப்பட்டபோது அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அவரது தாயார் கிம் சாங் ஏ - மாநில ஸ்தாபகரின் இரண்டாவது மனைவி - 1970 களில் செல்வாக்கு செலுத்தியவர் மற்றும் கிம் பியோங் இல் ஆட்சியைப் பிடிக்க அழுத்தம் கொடுத்தார். ஆனால் கிம் ஜாங் இல் வாரிசாக பெயரிடப்பட்ட பின்னர் அவர் விரைவில் ஆதரவை இழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயம்; உடல் நலம் குறித்து வதந்திகள்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் பொதுவெளியில் தோன்றி பல நாட்கள் ஆகிவிட்டதால், அவரின் உடல்நலம் பற்றி தற்போது மீண்டும் வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டனர்.
2. மனைவியை ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபம்
மனைவியை ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்களால் தென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபத்தில் உள்ளார்.
3. வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து மீண்டும் சதேகத்தை எழுப்பிய ஜப்பான்
வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து சந்தேகங்கள் இருப்பதாக ஜப்பான் கூறியுள்ளதால், மீண்டும் கிம் ஜாங் உன்னைப் பற்றிய சந்தேகங்கள் எழுத் துவங்கியுள்ளது.
4. தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு
தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.
5. வடகொரிய தலைவர் சகோதரி கிம் யோவின் தலைமையில் இயங்கும் அறை எண் 39-ன் மர்மம்
அறை எண் 39 வழியாக உலகின் ஆனைத்து வசதிகளையும் கிம் ஜாங் உன் அனுபவிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.