உலக செய்திகள்

மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல் + "||" + China may have 640,000 coronavirus cases instead of 84,000, leaked data from country's military-run university suggests

மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல்

மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல்
சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்ட்ச்த்திற்கு மேல் என உண்மையான விவரம் வெளியாகி உள்ளது இதனால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
பெய்ஜிங்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அங்கு வேகமாக பரவியதால், அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. அங்கு கொரோனா தாக்கி ஏராளமானோர் பலி ஆனார்கள்.

என்றாலும் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த நாட்டில் 81 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,310-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 84,029 என்றும் பலி எண்ணிக்கை 4673 என அதிகாரப்பூர்வ கணக்குகள் வெளியிட்டது.

சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா சீனாவை விட அமெரிக்கா, பிரான்ஸ்,இத்தாலி, ஸ்பெயின்,  நாடுகளில் அதிக உயிச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக பாதிப்பும் , இறப்பு எண்ணிக்கையும் பதிவாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்று ஏற்கனவே அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தங்கள் நாட்டில் நிகழ்ந்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த உண்மையான தகவல்களை மூடி மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.  அமெரிக்க குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் பென் செஸ்சே, மைக்கேல் மெக்கால் ஆகியோர், புலனாய்வு துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 640,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது. இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் தற்போது கசிந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.

இருப்பினும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள்.இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் வாயிலாக கசிந்த ஒரு புள்ளிவிவரத்தில்  சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 640,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்
கொரோனா நோய்த்தொற்றின் போது நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
2. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி
மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என பிரஹன்மும்பை மாநகராட்சி கூறி உள்ளது.
3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்
செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைதொடும். அப்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்
4. உச்சம் தொடும் கொரோனா: இந்தியாவில் 24 மணி நேரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
5. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.