கொரோனா நெருக்கடி: பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் அவரது செல்வாக்கை உயர்த்தி உள்ளது- கருத்து கணிப்புகள்


கொரோனா நெருக்கடி: பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் அவரது செல்வாக்கை உயர்த்தி உள்ளது- கருத்து கணிப்புகள்
x
தினத்தந்தி 18 May 2020 8:14 AM GMT (Updated: 18 May 2020 10:47 AM GMT)

கொரோனா நெருக்கடியில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் அவரது செல்வாக்கை உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளன என கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி: 

கொரோனா நெருக்கடியில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் அவரது செல்வாக்கை உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளன என கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன நியூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

நியூயார்க்டைம்ஸ் வெளியிட்டு உள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார், இது அவரது பதவிக்காலத்தில் அவர் எதிர் கொண்ட சவால்களில் மிகப்பெரியது.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டை உலுக்கின. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும்,அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் வருகை தந்தபோதே தலைநகரில் இந்து-முஸ்லீம் கலவரம் வெடித்தது. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, லட்சக்கணக்கான வேலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. உலக முழுவதும் இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த பிரச்சினைகளால் பொருளாதார பிரச்சினைகள் மோசமாகின.

ஆனால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு, 83,000 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 3000 இறப்புகள் பல நாடுகளை விட எண்ணிக்கை மிகக் குறைவு, குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி மற்றும் ரஷ்யா போன்ற பணக்கார நாடுகளை விட 
 
இதனால் கடந்த சில மாதங்களில் மோடியின் மீதான  மதிப்பீடுகள்  உயர்ந்து உள்ளன, 80 சதவீதம் , 90 சதவீதம்  கூட தொட்டுள்ளன என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர்  விளாடிமிர் புதின்  ஆகியோருடன் ஒப்பிடப்படும் போது மோடி இந்த நெருக்கடியை நன்கு எதிர்கொள்கிறார் என கூறப்படுகிறது.

சில ஆய்வாளர்கள் கூறுகையில், இந்தியா தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் உலக வல்லரசு நாடுகளைவிட குறைவாகவே உள்ளன. கொடிய தொற்றுநோய் அவரது நீடித்த செல்வாக்கு குறித்த கவலைகள் இருந்தபோதிலும் பல இந்தியர்களை அவரது  பக்கம் கொண்டுசென்றுள்ளது என கூறினார்கள்.

மோடியின் வெற்றி, இன்னும் நீடித்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவரது நாடு தழுவிய ஊரடங்கு ஏன் பெரும்பாலும் வெற்றி பெற்றது  என்பதை விளக்கக்கூடும்.

அவர் வலியுறுத்திய மென்மையான, உணர்வு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்தியர்களை தங்கள் வீட்டு வாசல்களில் நின்று கைதட்டும்படி செய்தது அல்லது இன்னொரு இடத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது போன்றவை லட்சகணக்கானவர்களால் பின்பற்றப்பட்டுள்ளன.

ஆய்வாளர்கள் கூறுகையில், அமெரிக்காவைப் போலல்லாமல் மோடி சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல், இந்தியா முழுவதும் உள்ள மாநில அளவிலான அதிகாரிகளுடன் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைவாக இருந்தபோது உலகின் மிகக் கடுமையான ஊரடங்கை வெற்றி கரமாக அமல்படுத்தியதன்  மூலம் பல நாட்டு தலைவர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்," என்று ஜிண்டால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் விவகாரங்களின் டீன் ஸ்ரீராம் சவுலியா கூறினார். 

இந்தியாவின் பெரும்பகுதி ஒரே மாதிரியாக உணர்கிறது என்று கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. 
தெளிவான விஷயம் என்னவென்றால், பல இந்தியர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
 
பல நாடுகளில் ஆன்லைன் ஆய்வுகள் செய்யும் ஒரு அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்சல்ட், மற்ற உலகத் தலைவர்களை விட மோடி  சிறப்பாக செயல்படுவதாக கூறி உள்ளது. டிரம்ப், புதின், ஜெர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல், இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பலரை விட அவரது புகழ் 80 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மற்றொரு கருத்துக் கணிப்பில் 93.5 சதவீதம்  பேர் மோடியை வைரஸ் நெருக்கடியை திறம்பட கையாளுவதாக உணர்ந்ததாகக் காட்டி உள்ளது . 93 சதவீதத்துக்கும் அதிகமான பேர் மோடி அரசு கொரோனா நெருக்கடியை திறம்பட கையாளும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Next Story