வானவில் : பி.எஸ் 6 தரத்தில் 2 புதிய மாடல்களில் டட்சன் கோ


வானவில் : பி.எஸ் 6 தரத்தில் 2 புதிய மாடல்களில் டட்சன் கோ
x
தினத்தந்தி 27 May 2020 12:34 AM GMT (Updated: 27 May 2020 12:34 AM GMT)

டட்சன் நிறுவனம் தனது பிரபலமான ஹேட்ச்பேக் மாடலில் 2 புதிய மாடல்களை பி.எஸ் 6 தரத்துடன் மேம்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது.

டட்சன் கோ மற்றும் டட்சன் கோ பிளஸ் என்ற பெயரில் வந்துள்ள இரண்டு மாடல்களுமே 1.2 லிட்டர் அளவில் 3 சிலிண்டரைக் கொண்ட என்ஜின் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேடிக் மற்றும் மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டதாக 5 கியர்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 77 பி.எஸ் திறனை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தக்கூடியது. இது எரிபொருள் சிக்கனமானது.

சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.02 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. ஹேட்ச்பேக் பிரிவில் மிகவும் குறைந்த விலை கொண்ட மாடலாக இவை விளங்குகின்றன. இதில் 7 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளது. முன் இருக்கை பயணிகளின் பாதுகாப்புக்கு 2 ஏர் பேக்குகள் உள்ளன. 5 பேர் பயணிக்கக்கூடிய டட்சன் கோ மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.3.99 லட்சம். இதில் ஏ.எம்.டி. மாடல் விலை சுமார் ரூ.6.25 லட்சம். 7 பேர் பயணிக்கும் டட்சன் கோ பிளஸ் மாடல் விலை சுமார் ரூ.4.20 லட்சம். இதில் பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.7 லட்சம். ஆறு கண்கவர் நிறங்களில் கிடைக்கும்.

Next Story