வானவில் : நோக்கியா 125, நோக்கியா 150


வானவில் : நோக்கியா 125, நோக்கியா 150
x
தினத்தந்தி 27 May 2020 1:06 AM GMT (Updated: 27 May 2020 1:06 AM GMT)

நோக்கியா செல்போன்களில் அடிப்படை மாடல்கள் மிகவும் பிரபலம். ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்த அடிப்படை மாடல்களில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை செய்து அறிமுகம் செய்து வருகிறது.

நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150 என்ற பெயரில் இரண்டு மாடல்கள் இப்போது வெளிவந்துள்ளன. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டதாக இவை வெளிவந்துள்ளன.

2.4 அங்குல திரை, எளிதில் பயன்படுத்தும் வகையில் மிகப் பெரிய அளவிலான பொத்தான்கள், நீடித்து உழைக்கும் பேட்டரி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். வயர்லெஸ் எப்.எம். ரேடியோ வசதி மற்றும் எம்.பி 3 பிளேயர் கொண்டதாக உள்ளது.

இதன் பின்புற கேமரா பிளாஷ் வசதி கொண்டதாக உள்ளது. இதில் மீடியாடெக் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 மெகா பிக்ஸெல் உள்ளடு நினைவக வசதி உள்ளது. 1,020 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் செயல்படும்.

கருப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளன. நோக்கியா 125 மாடல் விலை சுமார் ரூ.1,810. நோக்கியா 150 மாடல் சிவப்பு, சியான், கருப்பு நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.2,190.

Next Story