வானவில் : ஓப்போ ‘என்கோ டபிள்யூ 31’ வயர்லெஸ் இயர்போன்


வானவில் : ஓப்போ ‘என்கோ டபிள்யூ 31’ வயர்லெஸ் இயர்போன்
x
தினத்தந்தி 27 May 2020 1:57 AM GMT (Updated: 27 May 2020 1:57 AM GMT)

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஓப்போ நிறுவனம் ‘என்கோ டபிள்யூ 31’ என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

புளூடூத் 5 இணைப்பு இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட்போனுடன் இணைத்து செயல்படுத்தமுடியும். இரட்டை மைக்ரோபோன் உள்ளது. நீர்புகா தன்மை கொண்டது. இதன் எடை 4.6 கிராம்.

இதில் 25 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதை சார்ஜ் செய்தால் மூன்றரை மணி நேரம் செயல்படும். சார்ஜிங் பேக்கில் 350 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்தால் 15 மணி நேரம் வரை செயல்படும். இதன் விலை சுமார் ரூ.3,999.

Next Story