இந்திய கலாசாரத்தை கொண்டாடும் இசைப் பாடல்கள்


பரத் - சினேகா
x
பரத் - சினேகா
தினத்தந்தி 30 May 2020 6:31 AM GMT (Updated: 30 May 2020 6:31 AM GMT)

‘பா ... பா... பிளாக் ஷிப்’, ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ போன்ற மேற்கத்திய கலாசாரத்தை பறைசாற்றும் பாடல்களை கேட்டு வளர்ந்த நமக்கு, ‘குட்டுக்கி’ ( kutuki) ஆப்ளிகேஷனில் வரும் இந்திய கலாசார பாடல்கள் சற்று புதிதாகவே தோன்றுகின்றன.

வழக்கமான ‘ரைம்ஸ்’ பாடல் களுக்கு மாற்றாக, குட்டுக்கி ஆப்பில் புத்தம் புதிய ரைம்ஸ் பாடல்கள் இடம்பிடிக்கின்றன. சினேகா மற்றும் பரத் ஆகியோரின் புத்தாக்க முயற்சியில்தான், இந்த ‘குட்டுக்கி’ ஆப் புத்தம்புது பாடல்களோடு ஒலிக்கிறது.

“நானும் பரத்தும், ஐ.டி. துறையில் பணியாற்றியவர்கள். எங்களது சிந்தனை வெவ்வேறானது என்றாலும், எங்களை ஒன்றிணைத்த புள்ளி, இசை. நான் நன்றாக பாட்டு பாடுவேன். பரத் கிட்டார் மற்றும் வயலின் கலைஞர். அதனால் எங்களது கூட்டணியில் பல இசை நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஒருசில ஆவணப்படங்களுக்கும் ஒருசேர இசை பணியாற்றினோம்.

எங்களது கூட்டணி வெற்றிப்பெற நாங்கள், ‘குட்டுக்கி‘ ஆப் பற்றி சிந்திக்க ஆரம்பித் தோம்“ என முன்கதை சொல்லும் சினேகா-பரத் காம்போ, குடும்ப வாழ்க்கையிலும், குட்டுக்கி ஆப்பிலும் ஒன்றிணைந்து அசத்துகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த இவர்கள், நண்பர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துப்படியே, குழந்தைகளுக்கான இசைப் பாடல் உருவாக்க பணியில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டுள்ளனர்.

“யூ-டியூப் தளத்தில் குழந்தைகளுக்கு என ஏராளமான இசைப் பாடல்கள் இருக்கின்றன. அவை பல காலமாகவே இசைந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தவை. அதில் மேற்கத்திய கலாசாரமும், மேற்கத்திய பண்பாடுமே அதிகமாக வெளிப்படும்.



அதனால்தான், இந்திய கலாசாரத்தில், இந்திய பண்பாட்டை வெளிக் கொணரும் வகையில் குழந்தை களுக்கான இசைப் பாடல்களை உருவாக்க ஆசைப்பட்டோம். அப்படி உருவானதுதான், ‘குட்டுக்கி’ ஆப். இந்தியாவின் நில அமைப்பு, குடும்ப உறவுகள், வீட்டின் வடிவமைப்பு, உணவு பழக்க வழக்கங்கள், அன்றாட வேலைகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியும், அதையே பாடல் வரிகளாக மாற்றியும் இசைப்பாடல்களை உருவாக்கி இருக்கி றோம்” என்றார், பரத்.

“ஆரம்பத்தில் இசைப்பாடல்களுக்காக உருவாக்கப்பட்ட குட்டுக்கி ஆப்பில் இன்று குழந்தைகளுக்கு தேவையான பல அம்சங்கள் இருக்கின்றன. இசைப் பாடல்கள் வழியே இந்திய பாரம்பரியத்தை சொல்லிக் கொடுக்கிறோம். அதுமட்டு மின்றி, பள்ளி கல்வி கற்றுக்கொடுப்பதை போலவே, தனித்தனி பாட வசதிகளையும் உருவாக்கி இருக்கிறோம். 2 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கு குட்டுக்கி ஒரு ஆன்லைன் ஆசிரியர்.

எளிய முறையில் கணக்குப்பாடம், ஆங் கில அறிவு, அறிவியல் விளக்கம் என குழந்தைகளுக்கு தேவையான அம்சங்களை கொண்டு அப்ளி கேஷனை வடிவமைத்திருக்கிறோம். தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளோடு, வேறுசில மாநில மொழிகளிலும் படிக்கும் வகையில் அப்ளிகேஷனை உருவாக்கி உள்ளோம். பெற்றோர்களுக்கு வழிகாட்டும் அம்சங் களையும் அப்ளிகேஷனில் சேர்த்திருக் கிறோம்” என்று முடிக்கும் சினேகா, வரும்நாட்களில் குட்டுக்கி ஆப் பலவழி களில் குழந்தைகளுக்கு பயன்படும் என்று நம்பிக்கை விதைக்கிறார்.


Next Story