சிறப்புக் கட்டுரைகள்

மலையில் கிடைத்த புதுமை அனுபவம் + "||" + The novelty experience on the mountain

மலையில் கிடைத்த புதுமை அனுபவம்

மலையில் கிடைத்த புதுமை அனுபவம்
மலை ஏற்றம் செய்பவர்கள் அதற்குரிய ஆடைகளை அணிந்து கொண்டுதான் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால் பொலிவியாவைச் சேர்ந்த பெண்கள், தென்அமெரிக்காவின் உயர்ந்த மலைகளில் வண்ணமயமான பாரம்பரிய உடைகளில் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
 பாவாடை, மேல் சட்டை, போர்த்தப்பட்ட கம்பளி, தலைக்குச் சிறிய ஹெல்மெட், கம்பிகள் பொருத்தப்பட்ட ஷூக்கள், கொக்கியுடன் கூடிய கயிறு, கம்பு, முதுகில் அத்தியாவசியமான பொருட்கள் கொண்ட ஒரு பை போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஆபத்தான பனி மலைகளில் பயணம் செய்கிறார்கள்.


இந்தப் பெண்கள் ஆண்டிஸ் மலையடிவாரத்தில் வசிக்கும் பழங்குடியினர். சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை செய்வதுதான் இங்குள்ள ஆண்களின் பணி.

சுமை தூக்கு வது, சமையல் செய்து கொடுப்பது பெண்களின் பணி. 2 ஆண்டு களுக்கு முன்பு ஒருநாள் லிடியா தன் கணவரிடம், “மலை எவ்வளவு உயரம் இருக்கும்?, அதன் உச்சியை அடைந்தவுடன் எப்படி உணர்வீர்கள்?, அங்கே என்ன இருக்கிறது?” என்று கேட்டார். “உனக்கு விருப்பம் இருந்தால் நீயே மலையேறி, தெரிந்துகொள்” என்றார் கணவர்.

லிடியாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 15 பழங்குடிப் பெண்களை ஒருங்கிணைத்தார். தன்னுடைய விருப்பத்தைச் சொன்னார்.

42 முதல் 50 வயது வரை உள்ள நடுத்தர வயது பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கும் ஆர்வம் இருந்தது. பனியை உடைத்துச் செல்லவும், மலையில் எளிதாக ஏறவும் சில கருவிகள், ஷூக்கள் வாங்கினர். பனிப்படர்ந்த 19,974 அடி உயரமுடைய ஹுயானா போடோஸி மலையில் ஏற ஆரம்பித்தனர்.

உறைய வைக்கும் குளிர், ஆபத்தான பாதைகள், வயது முதுமையால் வரும் பிரச்சினைகள் அனைத்தையும் சமாளித்து, வெற்றிகரமாக மலை உச்சியை அடைந்தனர். 19,700 அடிகளுக்கு மேலே இருக்கும் 8 மலைகளையும் ஏறிவிட வேண்டும் என்று உறுதி பூண்டனர்.

பாரினகோடா, பாமராப், இல்லிமனி என்று 3 மலைகளில் ஏறி முடித்தனர். அகோன்ககுவா 22,841 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த மலை. அதிலும் ஏறி, பொலிவிய நாட்டுக் கொடியைப் பறக்க விட்ட னர். 8 மலைகளையும் முடித்த பிறகு, உலகின் அதிக உயரம் கொண்ட எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே தங்களின் இப் போதைய லட்சியம் என் கிறார்கள் இந்தச் சாதனைப் பெண்கள்.