சிறப்புக் கட்டுரைகள்

சைக்கிள் பயணமும், வாழ்க்கை பயணமும் + "||" + Bicycle travel and life travel

சைக்கிள் பயணமும், வாழ்க்கை பயணமும்

சைக்கிள் பயணமும், வாழ்க்கை பயணமும்
இங்கிலாந்தில் வசிக்கும் 47 வயது அன்னா ரெபலும், 55 வயது லீ அட்கின்சனும் 8 ஆண்டு கால நண்பர்கள். இருவருக்கும் சைக்கிளில் பயணம் செய்வது என்றால் மிகவும் விருப்பமான விஷயம்.
சைக்கிளிங் கிளப்பில்தான் இருவரும் சந்தித்தனர். வார இறுதியில் சேர்ந்தே சைக்கிள் பயணம் செய்வார்கள். நட்பு காதலாக மாறியது. 1400 மைல் தூரம் நீண்ட சைக்கிள் பயணத்தைத் திட்டமிட்டு, அந்தப் பயணத்திற்கு நடுவே திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.


பயண தேதியும், திருமண தேதியும் குறிக்கப்பட்டது. சைக்கிளில் ஜோடியாக கிளம்பினார்கள். இவர்கள் தினமும் 6 மணி நேரத்தில், 60 முதல் 85 மைல்கள் பயணம் செய்வார்களாம்.

பிறகு ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பயணத்தை தொடர்ந்தவர்கள் திட்டமிட்டபடியே நண்பர்கள் சூழ திருமணம் முடித்து கொண்டனர்.

பிறகு என்ன..?

‘சைக்கிளிங் ஹனிமூன்’தான்.

மீதமிருந்த பயண தூரத்தை திருமண உடை அணிந்தபடியே எட்டிப்பிடித்து, வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்கள்.