தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம் + "||" + Only 13% of allocated free food grain handed out to returning migrant workers, reveals govt data

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி

கொரோனாவின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சகணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஏராளமானோர் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தும் செல்கிறார்கள். இதில் பலர் இறந்தும் உள்ளனர்.

இந்தநிலையில், உணவு தானிய கிடங்குகளில் இருந்து தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை பெற்று நாடு முழுவதும் உள்ள 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் வினியோகம் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டு கொண்டது

மத்திய அரசு அல்லது மாநில அரசின் ரேஷன் கார்டுகள் அற்றவர்களுக்கும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

உணவு தானியம் வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் மராட்டியத்தில் 70 லட்சம், கர்நாடகாவில் 40.19 லட்சம், தமிழ்நாட்டில் 35.73 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்கி கிடங்குகளில் இருந்து உணவுப் பொருட்களை பெற்று புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு உடனடியாக வினியோகிக்க தொடங்க வேண்டும் என கூறியது.

ஆனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 8 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில்  13 சதவீதம் மட்டுமே உண்மையில் புலம்பெயர்ந்தோரை அடைந்துள்ளது என்று அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகர்ப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், மே மாதத்தில் இந்த சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகன் சமீபத்திய தகவல்கள், ரேஷன் கார்டுகள் இல்லாத சுமார் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை இரண்டு மாதங்களுக்கு விநியோகிக்கும் மையத்தின் அறிவிப்புக்கு எதிராக, 2.13 கோடி பயனாளிகள் மட்டுமே மே (1.21 கோடி) மற்றும் ஜூன் (92.44 லட்சம்) பயன் அடைந்து உள்ளனர்.

அமைச்சகத்தின் தரவுகளின்படி, அனைத்து 36 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 6.38 லட்சம் மெட்ரிக் டன் அல்லது 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களில் 80 சதவீதம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஆத்மனிர்பர் பாரத் அபியான் கீழ் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் ஜூன் 30 வரை 1.07 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை 13 சதவீத  பயனாளிகளுக்கு மட்டுமே விநியோகித்துள்ளனர்.

இரண்டு மாத கால ஒதுக்கீட்டை உயர்த்திய போதிலும், பல மாநிலங்கள் திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியங்களை விநியோகிக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன

அதிகபட்ச அளவாக  1,42,033 மெட்ரிக் டன் - உத்தரப்பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டது, இது 1,40,637 மெட்ரிக் டன்களை உயர்த்தி வாங்கி உள்ளது  ஆனால், மே மாதத்தில் சுமார் 4.39 லட்சம் பயனாளிகளுக்கு 3,324 மெட்ரிக் டன் (2.03 சதவீதம்) மற்றும் ஜூன் மாதத்தில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு மட்டுமே அரசு விநியோகித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பீகார் 86,450 மெட்ரிக் டன்களின் 100 சதவீத ஒதுக்கீட்டை உயர்த்தியது, ஆனால் மே மாதத்தில் சுமார் 3.68 லட்சம் பயனாளிகளுக்கு 1.842 மெட்ரிக் டன் (2.13%) மட்டுமே விநியோகித்தது, ஜூன் மாதத்தில் யாருக்கும் இல்லை என்று தரவு தெரிவிக்கிறது.

பதினொரு மாநிலங்களும் ஒரு யூனியன் பிரதேசமும்  ஜூன் மாதத்தில் அவர்கள் உயர்த்திய அளவுகளில் 1 சதவீதத்தை கூட பயனாளிகளுக்கு விநியோகிக்கவில்லை. அவை ஆந்திரா, கோவா, குஜராத், ஜார்க்கண்ட், லடாக், மராட்டியம், மேகாலயா, ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகியவையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
உலகிற்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
2. காசநோய்த் தடுப்பூசி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்...! ஆய்வில் தகவல்
காசநோயைத் தடுப்பதற்காக போடப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) ஆய்வில் கொரோனா தொற்றை கட்டிப்படுத்தலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
3. அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது - அமிதாப் பச்சன்
அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என அமிதாப் பச்சன் கூறி உள்ளார்.
4. அப்ரிடி அதிவேக சதம் அடித்த போது பயன்படுத்திய பேட் இந்திய வீரருடையது: சுவாராஸ்ய தகவல்
கடந்த 1994 ஆம் ஆண்டு 37-பந்துகளில் அப்ரிடி சதம் அடித்ததே அதிவேக சதமாக அப்போது பதிவு செய்யப்பட்டது.
5. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு குறித்து பரிசீலனை? முக்கிய தகவல்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.