தேசிய செய்திகள்

இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை + "||" + Conflict with India: Revolution in China's military Senior Leader Warning

இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை

இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை
இந்தியாவுடனான மோதல் காரணமாக சீனாவின் இராணுவத்தில் புரட்சி வெடிக்க கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.
புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை.

சீனாவின் சமூக ஊடகங்களில் பலர் இதைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  வெய்போ எனும் சமூகவலை தளத்தில் சீன தணிக்கை குறித்த கேள்விகளை எழுப்பினர், அதே நேரத்தில் சீன ராணுவம் அனுபவித்த மொத்த உயிரிழப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மையை கோரி வருகின்றனர். 

சீசீன  சமூக வலைதளமான  அவற்றில் பல சீனர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். 

அதில் ஒன்றில் "ராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை காட்டுவது என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறுகிறது. 

மற்றொன்று "இது இந்திய தேசத்தின்  ஒற்றுமையைக் காட்டுகிறது. நம்மைப் பற்றி என்ன? நாம் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டு நமது வீரர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும். இறந்த வீரர்களுக்கான நினைவு நிகழ்ச்சிகளை நாம் ஏன் வெளிப்படையாக நடத்தக்கூடாது?" என்று கூறுகிறது.   

மற்றொன்றில் ”இந்தியா அவர்கள் ராணுவ வீரர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுகிறது" என்று புகழ்கிறது. 

சிலர்  சீன அரசாங்கத்தை நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர், சீனா, குடிமக்கள் கருத்துக்களை அடக்கினால் தேசத்திற்காக தங்கள் உயிரை ஏன் தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 'மக்கள் விடுதலை இராணுவத்தின் உயிரிழப்புகள் ஏன் அறிவிக்கப்படவில்லை?  இதைக் கூட செய்யாமல் அவர்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதா?சீனா வெளியில் தந்திரங்கள் செய்கிறது ஆனால் உள்ளே உள்ள கருத்துக்களை அடக்குகிறது', என்று ஒருவர் கூறுகிறார்.   

மற்றொருவர் சீன ஊடகங்கள் அதிகப்படியான பொய்யைக் கொண்டிருப்பதாகவும், அதில் நிறைய நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறினார். இந்தியாவை விட அதிக உயிரிழப்புகள் சீன ராணுவத்திற்கு உண்டாயிருப்பதால் தான் இப்படி இறுக்கத்துடன் சீனா இருப்பதாக கருத்துகள் உலா வருகின்றன.

இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு அளிக்கபட்ட மரியாதை சீனாவில் இல்லை. அதனால் அங்கு எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தில் புரட்சி வெடிக்கலாம்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சீன அதிபர் ஜிங்பிங் மவுனம் காத்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு நாட்டில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கண்டிப்பாக இராணுவ புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரின் மகன் ஜியான்லி யாங் எச்சரித்துள்ளார்.

தற்போது அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக குரல் கொடுத்து அமெரிக்காவில் வசித்து வரும் ஜியான்லி யாங் இந்தியா - சீனா பிரச்சினை குறித்து கூறுகையில், சீனாவின் அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. அங்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்நாள் இராணுவ வீரர்கள் அரசுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளது. 

அவர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய புரட்சியை செய்ய வாய்ப்புள்ளது என்பதால் ஜிங்பிங் அச்சத்தில் இருக்கிறார்.

சீனாவில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்பதை தெரிவிக்காமல் ஜிங்பிங் மறைத்து வருகிறார். இந்தியாவை விட அங்கு அதிக வீரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அவர் உண்மையான எண்ணிக்கையை வெளியிட பயப்படுகிறார். தனது நாட்டில் புரட்சி வெடிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அவரின் சைனீஸ் கம்யூனிஸ்ட் கட்சியினரே தற்போது ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள்.

சீனாவின் அரசில் இராணுவத்தின் பங்குதான் அதிகம். இராணுவத்திற்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும்.இராணுவத்திற்கு எதிராக ஜிங்பிங் செயல்பட தொடங்கி உள்ளார். இது கண்டிப்பாக அவருக்கு நல்லது அல்ல. சீன இராணுவத்தில் இருக்கும் பலர் ஏற்கனவே ஜிங்பிங்கிற்கு எதிராக இருக்கிறார்கள்.

பல ஆயிரம் பேர் ஜிங்பிங் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்குவார்கள். அதேபோல் சீனாவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஜிங்பிங்கிற்கு எதிராக களமிறங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து பேசி வருகிறார்கள்.

சீனா மோதியதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் இவர்கள் எல்லாம் ஜிங்பிங்கிற்கு எதிராக கலகம் செய்ய வாய்ப்புள்ளது. சீன இராணுவத்தை பல காலமாக ஜிங்பிங் ஒடுக்கி வருகிறார். இப்போது அங்கு நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.சீனாவின் இராணுவத்தில் 5.7 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் ஆட்சியை, அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் - பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2. சீனா படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது திட்டவட்டம்
சீனா தனது படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் தனது துருப்புக்களை திரும்பப் பெறாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு பாராட்டு
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் பாகிஸ்தான் வபாபர் அசாமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
4. அயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்:வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
அயோத்தி ராமர் கோவில் குறித்த பாகிஸ்தான் விமர்சனம் வகுப்புவாத தூண்டுதலில் இருந்து விலகி நிற்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
5. சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கம்
சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் இந்தியா பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.