தேசிய செய்திகள்

சீனா உதவியுடன் வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் பாகிஸ்தான்;இந்தியா கவலை + "||" + Kashmir Discussed By Pak, Bangladesh? Reports Raise Eyebrows In India

சீனா உதவியுடன் வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் பாகிஸ்தான்;இந்தியா கவலை

சீனா உதவியுடன் வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் பாகிஸ்தான்;இந்தியா கவலை
காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்த வங்காள தேசம்- பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் பாகிஸ்த்தான். இந்தியா கவலை தெரிவித்து உள்ளது.
கொல்கத்தா:

பாகிஸ்தான் அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்  

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும். வங்காள தேசபிரதமருடன்  ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை இம்ரான் ஆன் கான் பகிர்ந்து கொண்டதாவும் கூறபட்டு உள்ளது.

ஏற்கனவே வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்திவரும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்து உள்ளன.

காஷ்மீர் குறித்து இந்த இரு நாடுகளிலிருந்தும் மாறுபட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

வங்காள தேசத்தின் சுருக்கமான இரண்டு பத்தி அறிக்கையில் காஷ்மீரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, இரு தலைவர்களும் கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் வங்காள தேச வெள்ளம் குறித்து விவாதித்ததாக கூறப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் எட்டு பத்தி அறிக்கையில், பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் குறித்த "பாகிஸ்தானின் பார்வையை பகிர்ந்து கொண்டார்" என்றும் "அமைதியான தீர்மானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்" என்றும் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து கவலைக்கு எந்த காரணமும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "வங்காளதேசத்துடனான  நமது  உறவுகள் நேர சோதனை மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் அதன் அனைத்து முன்னேற்றங்களும் இந்தியாவின் உள் விவகாரங்கள் என்ற அவர்களின் நிலையான நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். இது அவர்கள் எப்போதும் எடுத்துள்ள நிலைப்பாடு" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறி உள்ளார்.

ஆனால் சில வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் இதனை நம்பவில்லை.

"நிச்சயமாக இந்தியா கவலைப்பட வேண்டும்" என்று கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஆய்வாளரும் ஈஸ்டர்ன் லிங்க் என்ற செய்தி இணையதளத்தின்  ஆசிரியருமான சுபீர் பவுமிக் கூறி உள்ளார். வங்காள தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் மீட்டெடுக்கப்பட்ட விதம், குறிப்பாக லடாக்கில் சீனாவுடன் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நேரத்தில் திடீரென மனநிலை மாறி உள்ளது, திரைக்குப் பின்னால் உள்ள சீனாவின்  சில இராஜதந்திர சூழ்ச்சிகளைக் குறிக்கிறது

பிரதமர் ஷேக் ஹசீனா அலுவலகத்தில் பாகிஸ்தான் சார்பு குரல்கள் "மற்றும் காஷ்மீர்  பிரச்சினை எழுப்பப்படுவது" என்பது சிறப்பு கவலைக்குரியது.

"ஷேக் ஹசீனா ஒரு லக்ஷ்மண கோட்டை மிகவும் தீர்க்கமான வழியில் கடந்துவிட்டார் என்று தோன்றுகிறது என கூறி உள்ளார். 

இம்ரான் கானுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு எந்தவிதமான பயணமும் வரவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எச்சரிக்கைக்கு எந்த காரணமும் இல்லை என்று முன்னாள் வெளியுறவு செயலாளர் கிருஷ்ணன் சீனிவாசன் கூறுகிறார். "இரண்டு பிராந்திய பிரதமர்கள் பேசுவது வழக்கத்திற்கு மாறானதல்ல. இரண்டு இஸ்லாமிய நாடுகளின் பிரதமர்களான அவர்கள் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவாகாரம் குறித்து பேசியது ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று  கூறினார்.

370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டபோது, ​​இது இந்தியாவின் உள் விஷயம் என்ற நிலைப்பாட்டை வங்காள தேசம் எடுத்து இருந்தது.

ஆனால் அதன் வெளியுறவு மந்திரி அப்துல் மூமன் குடியுரிமை (திருத்தம்) சட்டம் ஒரு மதச்சார்பற்ற தேசமாக இந்தியாவின் வரலாற்று தன்மையை பலவீனப்படுத்தக்கூடும் என்று கூறி டிசம்பர் மாதம் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார் என்பது  குறிப்பிடதக்கது.

சில ஆய்வாளர்கள், பாகிஸ்தானின் குரல் வங்காள தேசத்தில் முன்பை விட சமீப நாட்களில் சத்தமாக உள்ளது, பிரதமர் அலுவலகத்திற்குள் கூட. பாகிஸ்தான் சார்பு குரல்களில் ஒன்றான கோடீஸ்வர தொழிலதிபர் சல்மான் பஸ்லூர் ரெஹ்மான், கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவின் தனியார் துறை தொழில் மற்றும் முதலீட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சல்மான் ஃபஸ்லூர் ரஹ்மான் நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனமான பெக்ஸிம்கோவின் துணைத் தலைவராக உள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு அமெரிக்க தூதரக கேபிள்கள் அவரை வங்காளதேசத்தின்ன் மிகப்பெரிய கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களில் ஒருவர் என்று வர்ணித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனா படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது திட்டவட்டம்
சீனா தனது படைகளை முழுவதுமாக வாபஸ் பெறும் வரை இந்தியாவும் தனது துருப்புக்களை திரும்பப் பெறாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு பாராட்டு
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் பாகிஸ்தான் வபாபர் அசாமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
3. அயோத்தி ராமர் கோவில் குறித்த விமர்சனம்:வகுப்பு வாதத்தை தூண்ட வேண்டாம் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
அயோத்தி ராமர் கோவில் குறித்த பாகிஸ்தான் விமர்சனம் வகுப்புவாத தூண்டுதலில் இருந்து விலகி நிற்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.
4. சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கம்
சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் இந்தியா பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
5. பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தை உஷார் நிலையில் இருக்க ஆப்கானிஸ்தான் உத்தரவிட்டு உள்ளது.