தேசிய செய்திகள்

சீறிப்பாய்ந்து வந்து இறங்கிய ரபேல்...!! அசூர பலம் பெறும் இந்திய விமானப்படை...!!! + "||" + ‘May you touch the sky with glory… Happy landing’: Indian Rafales welcomed by Navy warship in Arabian Sea

சீறிப்பாய்ந்து வந்து இறங்கிய ரபேல்...!! அசூர பலம் பெறும் இந்திய விமானப்படை...!!!

சீறிப்பாய்ந்து வந்து இறங்கிய ரபேல்...!! அசூர பலம் பெறும் இந்திய விமானப்படை...!!!
இந்தியாவுக்கு வந்து இறங்கிய ரபேல் விமானங்கள்; ரபேல் இந்திய விமானப்படையில் சேருவதை தொடர்ந்து போர்த் திறனை அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி

ரபேல் போர் விமானம் இன்று இந்தியாவுக்கு வந்தது. பிற்பகல் 2 மணிக்கு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின. அரேபிய கடலில் கடற்படை போர்க்கப்பல் அதனை வரவேற்றன.

கடற்படை போர்க்கப்பல் ஒரு வானொலி செய்தியில் ரபேல் குழுவை வரவேற்றது. ஐ.என்.எஸ் கொல்கத்தா மற்றும் ரபேல் ஜெட் விமானங்களுக்கு இடையேயான குறுகிய ஆனால் முழு உரையாடல் இங்கே ஒரு ஐ.ஏ.எப் விமானியால் கொடுக்கப்படுகிறது.

ஐ.என்.எஸ் கொல்கத்தா டெல்டா 63: “அம்புத் தலைவர் (பறக்கும் ரஃபேல்), இந்தியப் பெருங்கடலுக்கு வருக.”

ரபேல் தலைவர்: “மிக்க நன்றி. ஒரு இந்திய போர்க்கப்பல் கடலைக் காத்துக்கொள்வது மிகவும் உறுதியளிக்கிறது. ”

ஐ.என்.எஸ் கொல்கத்தா: “நீங்கள் மகிமையுடன் வானத்தைத் தொடுங்கள். மகிழ்ச்சியான தரையிறக்கம். ”

ரபேல் தலைவர்: “உங்களுக்கு நியாயமான வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும். மகிழ்ச்சியான வேட்டை.  ”

என வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது.

ரபேல் வருகையால் அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அங்கு புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

விமானப் படையில் 5 ரபேல் விமானங்கள் இணைந்த பின்னர், வான்படைத் திறனில் இந்தியா அண்டை நாடுகளை விட அதிக சக்தி வாய்ந்ததாக திகழும் என்பது உறுதியாகி உள்ளது.

ரபேலால் விமானப்படையின் போர்த் திறனை அதிகரித்து, தெற்காசிய நாடுகளுக்கிடையே இந்தியாவின் பலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 1997 ல் ரஷியாவின் சுகோய் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டதற்குப் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதியாகும் முதலாவது போர் விமானம் ரபேல் ஆகும்.

நம்மிடம் உள்ள மிராஜ் 2000 மற்றும் சுகோய் விமானங்கள் மூன்று அல்லது நான்காம் தலைமுறை விமானங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரபேல் விமானம் நான்காவது தலைமுறை விமானம் என பட்டியலிடப்பட்டுள்ளது. ரபேல் எதிரியின் ரேடார் கண்களுக்கு புலப்படாது என்பது சிறப்பு அம்சமாகும்.

விமானந்தாங்கி கப்பல் அல்லது கடலோர தளங்களில் இருந்து பறந்து உயரக் கூடியது என்பது மற்றோர் சிறப்பு அம்சமாக இருக்கிறது. உளவு பார்த்தல், வான்வெளி பாதுகாப்பு, உள் நுழைந்து தாக்குதல், அணு ஆயுத திறன், எதிரி போர்க்கப்பல்களை தாக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து விதமான போர் நடவடிக்கைகளையும் ரபேலால் மேற்கொள்ள முடியும்.

ஹெல்மெட் மவுன்டட் லைட், ரேடார் எச்சரிக்கை கருவிகள், பறத்தல் தொடர்பான விவரங்களை 10 மணி நேரம் வரை சேமித்து வைக்கும் வசதி, ஜாம்மர்கள், இன்ஃப்ரா ரெட் டிராக் சிஸ்டம்ஸ், மலைப் பிரதேசங்களில் இயக்கப்படுவதற்கான கோல்டு எஞ்சின் ஸ்டார்ட் வசதி, தாக்க வரும் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்கும் வசதி உள்ளட்டவை ரபேலில் உள்ளன.

விமானப் படையின் தங்க அம்புகள் என்று அழைக்கப்படும் 17 ஆவது விமான அணியில் ரபேல் விமானங்கள் இணைக்கப்படுகின்றன. ரபேலின் முதலாவது விமான அணி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்பாலாவில் இருந்து இயங்கும். இரண்டாவது விமான அணி. மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா படைத் தளத்தில் நிறுவப்படும்.

அம்பாலா விமான நிலையத்திலிருந்து லே 427 கி.மீ தொலைவில் உள்ளது. இது  எல்லைக்கட்டுப்பாடு கோடு மிக அருகில் உள்ளது. அதுபோல் அம்பாலா விமான நிலையத்திலிருந்து கார்கில்  456 கி.மீ தொலைவில் உள்ளது. இது  எல்லைக்கட்டுப்பாடு கோடு மிக அருகில் உள்ளது.அதேசமயம் பாகிஸ்தான் எல்லை அம்பாலா விமான நிலையத்திலிருந்து 220 கி.மீ. என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பாலாவில் ரபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படுவதால், இரு முனைகளிலும் கிட்டத்தட்ட சமமான தூரம் இருக்கும் .. ரபேல் ஒரு மணி நேரத்திற்கு 2,000 கி.மீ வேகத்தில் பறக்கும் என்பதால், அவசரகால நடவடிக்கை எடுப்பதற்காக ரபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அம்பாலா விமான நிலையத்திலிருந்து திபெத் 1152 கி.மீ தொலைவில் தான் உள்ளது. இந்த தொலைவை ரபேல் 30 நிமிடங்களில் சென்றடைந்துவிடும். அம்பாலா விமான நிலையத்திலிருந்து 3720 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ஜிங்கை ரபேல் சுமார் 100 நிமிடங்களில் சென்றடைந்துவிடும்.

ஹாங்காங், அம்பாலா விமான நிலையத்திலிருந்து 3811 கி.மீ தூரத்தில் உள்ளது .. ரபேல் ஹாங்காங்கை 120 நிமிடங்களில் சென்றடைந்துவிடும்.  

அதாவது, போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் ஏற்பட்டால், ஒரு மணி நேரத்திற்குள் சீனாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விமான தளங்களை ரபேல் விரைவில் தாக்க முடியும்...

மிக் -21 இன்னும் சில ஆண்டுகளில் இங்கிருந்து அகற்றப்படும் சூழ்நிலையில், ரபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் நிலைநிறுத்தப்படுவது மிகவும் முக்கியமானது ..  இந்தியாவின் பெரும்பாலான போர் விமானங்கள் அம்பாலாவில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை குறிப்பாக சொல்லலாம்.
வல்லமை வாய்ந்த சூப்பர்சோனிக் ஏவுகணைகளின் படைப்பிரிவான பிரம்மோஸ் அம்பாலாவில் தான் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  

அம்பாலா ஏர்பேஸிலிருந்து இஸ்லாமாபாத் வரை 509 கி.மீ தூரத்தில் இருக்கிறது. ரபேல் போர் விமானம் வெறும் 13 நிமிடங்களில் அங்கு சென்றடைந்துவிடும். அதேபோல் கராச்சி, அம்பாலாவில் இருந்து 1141 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் வெறும் 32 நிமிடங்களில் ரபேல் அங்கு சென்றடைய முடியும்.  பாகிஸ்தானின் லாகூரை ரபேல் வெறும் 10 நிமிடங்களில் சென்றுவிடும். லாகூருக்கும் அம்பாலாவுக்கும் இடையிலான தொலைவு 264 கி.மீ தான்..

பிரான்ஸ்,எகிப்து, கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரபேலை வைத்துள்ள 4-வது நாடாக இந்தியா மாறி உள்ளளது. ரபேல் விமானங்களுக்கான பராமரிப்பு வசதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு விமானப்படை சுமார் 400 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

அதே நேரம் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான 5 ஆம் தலைமுறை ஜெ-20 போர் விமானங்களுடன் ரபேலை ஒப்பிட முடியாது என்பதும் கவனிக்கத்தக்கதாகும், இந்த விமானங்களை சீனா தனது வான்படையில் விரைவில் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது வந்துள்ள 5 விமானங்கள் தவிர்த்து 13 ரபேல் விமானங்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள்ளும், எஞ்சிய விமானங்கள் 2022 ஏப்ரல்-மே மாத வாக்கிலும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் விமானங்கள் வாங்குவதற்கு ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.