புதிய ஊடுருவல் முயற்சிக்கு லடாக் எல்லை அருகில் ஜே -20 ரக போர் விமானங்களை குவிக்கும் சீன விமானப்படை


புதிய ஊடுருவல் முயற்சிக்கு லடாக் எல்லை அருகில் ஜே -20 ரக போர் விமானங்களை குவிக்கும் சீன விமானப்படை
x
தினத்தந்தி 31 Aug 2020 9:53 AM GMT (Updated: 31 Aug 2020 9:53 AM GMT)

சீன விமானப்படை புதிய ஊடுருவல் முயற்சிக்கு லடாக் எல்லை அருகில் சீன விமானப்படை ஜே -20 ரக போர்வி மானங்களை மீண்டும் குவித்து வருகிறது.


புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ள முடிவெடுத்து உள்ளன. கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 15 இல் ஆரம்ப படைகள் விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டுகிறது.

லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.  பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.

இந்த் நிலையில் சீன விமானப்படை தனது ஜே -20 ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை  இந்திய எல்லைக்கு அருகில் மீண்டும் பணியில் அமர்த்தி உள்ளது. சீன படைகள்  லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தென் கரைக்கு அருகே புதிய மீறல்களை மேற்கொள்ள முயன்ற சில நாட்களுக்கு முன்பு இந்த விமானங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

"ஜே -20 போர் விமானங்கள் கடந்த சில நாட்களாக இந்திய எல்லைக்கு அருகே இயங்கி வருகின்றன.

இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாங்காங்க் த்சோ ஏரியின் தென் கரையில் நிலையை "ஒருதலைப்பட்சமாக" மாற்ற "ஆத்திரமூட்டும் இராணுவ இயக்கங்களை" மேற்கொள்ள சீன முயற்சியை இராணுவம் தடுத்தது என கூறி உள்ளது

ஜே -20 விமானங்கள் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஹோடன் விமானத் தளத்திலிருந்து இயங்குவதாகக் கூறப்படுகிறது, அங்கு மூலோபாய குண்டுவீச்சு மற்றும் பிற போர்விமான  செயல்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஃபேல் போர் விமானங்களை இந்தியா இயக்கத் தொடங்கியதையடுத்து, லடாக்கிற்கு அருகிலுள்ள விமான தளங்களில் சீன விமானப்படை தங்களது சமீபத்திய விமானத்தை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது,

இந்திய விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பிற ஏஜென்சிகள் சீன விமானப்படை நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,ஏதேனும் தவறான செயல்கள் நடந்தால் அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

லடாக் எதிரே அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரே எல்.ஐ.சி வழியாக ஏழு சீன விமான தளங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டார தகவல்களின்படி, சீன  இராணுவ விமானப்படை (பி.எல்.ஏ.ஏ.எஃப்) சமீபத்திய காலங்களில் இந்த விமான தளங்களை மேம்படுத்தியுள்ளது, இதில் கடினப்படுத்தப்பட்ட தங்குமிடங்களை நிர்மாணித்தல், ஓடுபாதை நீளங்களை நீட்டித்தல் மற்றும் கூடுதல் மனிதவளத்தை பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


Next Story