உலக செய்திகள்

என்ன ஆனார்... வடகொரியா அதிபர் சகோதரி... ஆபத்தில் இருக்கலாம்..? + "||" + SIBLING RIVALRY ‘Bloodthirsty’ Kim Jong-un could EXECUTE his sister after she made power grab when he vanished from spotlight

என்ன ஆனார்... வடகொரியா அதிபர் சகோதரி... ஆபத்தில் இருக்கலாம்..?

என்ன ஆனார்... வடகொரியா அதிபர் சகோதரி... ஆபத்தில் இருக்கலாம்..?
கடந்த சில மாதங்களாகவே வடகொரியா அதிபர் சகோதரியைப் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் ஆபத்தில் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன்

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல் நிலை சீராக இல்லை என்ற தகவலும் வெளியானது.

ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கும் வகையில், கிம் ஜாங் உன் சமீபத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படங்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.இதற்கு முன்பு, அவர் உயிரிழந்துவிட்டதாகவும், இதயத்தில் பிரச்சினை இருப்பதாகவும் செய்தி வெளியாகின. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் உரத் தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த இரண்டின் போதும், அவருடைய சகோதரியான கிம் யோ ஜாங் பற்றிய பேச்சுகள் தான் அதிகம் வந்தன. ஏனெனில் கிம் ஜாங் உன்னிற்கு பிறகு இவர் தான், வடகொரியாவை வழி நடத்த தகுதியானவர், இவருக்கு தான் கிம் முன்னுரிமை கொடுப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது.அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு, கிம் ஜாங் உன் மன அழுத்ததில் இருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் தன் சகோதரிக்கு தேவையான அதிகாரத்தை ஒப்படைத்துள்ளதாக உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது.இந்நிலையில், தற்போது கிம் யோ ஜாங் கடந்த ஜுலை 27-ஆம் தேதி முதல் பொது வெளியில் காணப்படவில்லை. இதனால் அவரைப் பற்றி புது ஊகங்கள் எழுந்துள்ளன.

வட கொரியாவின் சர்வாதிகார ஆட்சியைப் பெறுவதற்கு அவர் தயாராக இருப்பதாக கூறப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, இவர் காணமல் போயுள்ளதால், இந்த சந்தேகம் எழுந்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் இருந்து வரும் தகவல்களின்படி, கடந்த ஜூலை 27-ஆம் திக்தி முதல் கிம் யோ ஜாங் பொதுவில் காணப்படவில்லை.இந்த ஆண்டு முதல் அவர் அதிக முறை பொதுவெளியில் காணப்பட்ட நிலையில், ஆனால் சமீபத்தில் அவரை காணமுடியவில்லை

அதிலும், கடந்த சில தினங்களாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளுடன் பல முறை ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அதில் எங்கும் அவருடைய சகோதரி காணப்படவில்லை.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான கடுமையான முயற்சியில் கிம் ஜாங்-உனின் சகோதரி பியோங்யாங்கில் இந்த பணியில்  உள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில், கொரோனா சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளை சந்தித்த பின்னர், கைசோங் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். வட கொரியா இன்னும் ஒரு தொற்றுநோயை உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், அவரது சகோதரி கிம் யோ-ஜாங் இப்போது பியோங்யாங்கில் இதேபோன்ற திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

கிம் மிகவும் மோசமானவர் என்பதால், அவரைப் பற்றிய பேச்சுகள் சர்வதேச பத்திரிக்கைகளில் அதிகம் வந்துள்ளதால், கிம் யோ ஜாங் ஆபத்தில் இருக்கலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், ஆட்சி அதிகாரத்திலிருந்து தன்னை தூக்கியெறிய திட்டமிட்டதாக கூறி தனது சொந்த மாமாவை வட கொரியா கொலை செய்ய உத்தரவிட்டார்.

வடகொரியாவில் சக்தி வாய்ந்த அரசு அதிகாரியாக திகழ்ந்த அவரின் மாமா ஜாங் சங் (67) சீனாவின் உதவியோடு அவரின் அரசை கவிழ்க்க நினைத்து அதற்கான வேலைகளில் ரகசியமாக ஈடுப்பட்டதாகவும், அதோடு கிம் ஜாங் உன்-னின் சகோதரர் கிம் ஜாங் நம்-ஐ நாட்டின் தலைவராக ஆக்கவும் திட்டமிட்டதாகவும் என்ற தகவல் கிம்முக்கு தெரியவரவே இந்த உத்தரவை பிறப்பித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போன்று கிம் ஜாங் நம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதற்கும் கிம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுவே அவருடைய சகோதரி மீதான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கொரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்நம் சுங் ஓக்  கடந்த காலங்களில், வடக்கில் நம்பர் டூ என்று வர்ணிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் இப்போது காணவில்லை. என்னைப் பொறுத்தவரை கிம் யோ ஜாங் தனது சொந்த விருப்பப்படி வடகொரியா விவகாரத்தில் இருந்து பின்வாங்கியிருக்கலாம் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிஏற்க உள்ள நிலையில் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.
2. புத்தாண்டில் மக்களிடம் மன்னிப்பு கோரிய வடகொரியா தலைவர்
பொருளாதார முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக மக்களிடம் புத்தாண்டில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரினார்.
3. ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மை- வட கொரியா
ஐ.நா.அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மையாக உள்ளது என வட கொரியா குற்றஞ்சாட்டி உள்ளது.
4. மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் முன்னாள் காதலி
மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் எஜமானி என்று பலரால் நம்பப்படும் முன்னாள் காதலி
5. சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்
சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.