தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் அதிகம் பேர் அச்சம் காரணமாகவே பரிசோதனைக்கு செல்வது இல்லை + "||" + Corona vulnerability: More people in India Because of fear Not going to experiment

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் அதிகம் பேர் அச்சம் காரணமாகவே பரிசோதனைக்கு செல்வது இல்லை

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் அதிகம் பேர் அச்சம் காரணமாகவே பரிசோதனைக்கு செல்வது இல்லை
77 சதவீதம் இந்தியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பாளர்களை தினமும் சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றனர் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அதிகபட்சம் பேர் தன்னால் குடும்பத்தினருக்கும் கொரோனா வரும் என்கிற அச்சமும், மருத்துவமனை செல்வதற்கும் அச்சமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது இந்திய குடிமக்களிடம் முதல் கேள்வியாக இந்த கொரோனா நெருக்கடியில் நீங்கள் அதிகம் எதை நினைத்து பயப்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.

அதில் ஐந்து சதவீதம் மக்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் நிலையை நினைத்து கவலைப்படுவதாகக் கூறியுள்ளனர்.

29 சதவீதம் குடும்பத்தினருக்கு அல்லது உடன் பணியாற்றுவோருக்கு கொரோனாவை பரப்பிவிடுவோமோ என அஞ்சுவதாக கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை நினைத்தால் பயமாக இருப்பதாகவும் 8 சதவீதம் பேர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை நினைத்தும் 6 சதவீதம் பேர் லோக்கல் அதிகாரிகளை சமாளிப்பதை நினைத்தும் பயம் கொள்வதாகக் கூறியுள்ளனர்.

70 சதவீதம் பேர் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வருமானம் குறைந்துள்ளதை நினைத்தும் பயம் கொண்டுள்ளனர். 13 சதவீதம் பேர் எதை நினைத்தும் பயமில்லை என்று கூறியுள்ளனர்.

இதை ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இந்தியர்கள், குடும்பத்தினருக்கு அல்லது உடன் பணியாற்றுவோருக்கு கொரோனாவை பரப்பிவிடுவோமோ என அஞ்சுவோரின் எண்ணிக்கையும் , மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை நினைத்தால் பயமாக உள்ளது என்று கூறுவோரின் எண்ணிக்கையும்தான் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளது.

இரண்டாவது கேள்வியாக உறவுகள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், பக்கத்து வீட்டர், வியாபார நண்பர்கள் என உங்கள் சுற்றத்தாரிடம் இந்த கொரோனாவின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அதற்கு 31 சதவீதம் பேர் 6 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்தவர்களே என்றும், 34 சதவீதம் பேர் 2-5 பேரையாவது பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாகவும், 12 சதவீதம் பேர் ஒருவராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிந்தும் பேசுவதாக கூறுகின்றனர். 20 சதவீதம் பேர் பழகுவோர் யாரிடமும் கொரோனா இல்லை என நம்புவதாக கூறியுள்ளனர்.

இதிலிருந்து 77 சதவீதம் இந்தியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பாளர்களை சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றனர் என்பது தெரிகிறது.

அதேபோல் உங்கள் சுற்றத்தார்களில் யாரேனும் அறிகுறிகள் இருந்தும் பரிசோதனை செய்துகொள்ளாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்றுள்ளார்களா..? என்று கேள்விக்கு 

14 சதவீதத்தினர் 10 மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும், 10 சதவீதம் பேர் 6-10 பேர் என்றும் 14 சதவீதம் பேர் 2-5 பேர் என்றும் 10 சதவீதம் பேர் ஒருவர் என்றும் 52 சதவீதம் பேர் சரியாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும் இதன் மூலம் பல பேர் பரிசோதனை செய்து கொள்ள பயப்படுவதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவதிலும் பயம் கொள்வதாகத்  தெரிகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர்
அதிர்ஷ்டம் பாதுகாக்காது: உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது.
4. புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை: பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை
புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என கூறிய மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்த அரசாங்கத்தின் தெளிவு படுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
5. உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்- உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள்
உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார்.