சிறப்புக் கட்டுரைகள்

மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + Russia to roll out COVID-19 vaccine for civilian use before WHO approval, Phase III trials

மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள் பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனாவை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக ரஷிய தடுப்பூசி வினியோகம் தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

உலகையே கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷியா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையொட்டி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

“கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷிய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் வினியோகமானது, தடுப்பூசியை பரவலாக்கும். மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும்” என கூறப்பட்டுள்ளது. உலகிலேயே ரஷியாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.
3. அசாமில் மேலும் 2,394- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,394-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.