தேசிய செய்திகள்

இந்தியாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; மாநில வாரியாக பாதிப்பு விவரம் + "||" + Coronavirus live updates: India records single-day spike of 83,809 cases

இந்தியாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; மாநில வாரியாக பாதிப்பு விவரம்

இந்தியாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; மாநில வாரியாக  பாதிப்பு விவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை நெருங்குகிறது; மாநில வாரியாக பாதிப்பு விவரம் வருமாறு:-
புதுடெல்லி

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  1,054- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கி  49 லட்சத்து 30 ஆயிரத்து 237- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 776- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மராட்டியம் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளமாநிலமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 17,066 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் மொத்த எண்ணிக்கை10,77,374 ஆக உள்ளது. 257 புதிய மரண மாநிலத்தில் பலி எண்ணிக்கை 29,894 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 70.16 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.77 சதவீதமாகவும் உள்ளது.

செயலில் உள்ள பாதிப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை மராட்டியம், கர்நாடகா மற்றும் ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் குவிந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


மாநிலங்கள்மொ.பாதிப்புசிகிச்சையில்குணமானவர்கள்நேற்றுபாதிப்புமரணம்
அந்தமான் நிகோபார்22725 327835 52
ஆந்திரா932041868 4769039764 497260 
அருணாசலபிரதேசம்175624 4531152 11
அசாம்28630469 1150541921 48213 
பீகார்13975138 1455602210 831
சண்டிகார்2847119 5300130 98
சத்தீஸ்கார்336452140 331091178 57318 
தாதர் நகர் காவேலி248251325 2 
டெல்லி28641171 1881223374 477026 
கோவா4946227 19648519 30414 
குஜராத்1646962 951381255 322717 
அரியானா20417338 747122125 100025 
இமாசலபிரதேசம்3659295 618268 82
ஜம்மு & காஷ்மீர்18049568 36381644 89517 
ஜார்கண்ட்14064272 481121529 561
கர்நாடகா98482740 3618238865 7384119 
கேரளா30555415 798092110 45415 
லடாக்90334 247539 41
மத்தியபிரதேசம்21228741 677111713 179129 
மராட்டியம்291630914 75585015789 29894363 
மணிப்பூர்158553 6340149 46 
மேகலயா168663 215176 27
மிசோரம்54949 91989 0 
நாகலாந்து1289117 391514 10 
ஒடிசா32344805 1220243382 63711 
புதுச்சேரி480573 15027457 394
பஞ்சாப்20690903 589991463 242468 
ராஜஸ்தான்1672672 861621644 125014 
சிக்கிம்58215 152116 16
தமிழ்நாடு46912100 4531655799 843453 
தெலுங்கானா30400132 1291872180 98410 
திரிபுரா7564135 11925389 207
உத்தரகாண்ட்10374145 222131173 42915 
உத்தரபிரதேசம்67287835 2454175932 449162 
மேற்குவங்காளம்l2369369 1782233084 400358 
 9900613463 385939979292 807761054

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் ஏப்ரல் மாத சூழலை திரும்ப கொண்டு வர வேண்டும்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
எல்லையில் பழைய சூழலை திரும்பக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
2. லடாக் மலை முகடுகளை இந்தியா மீட்டெடுத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
லடாக் மலை முகடுகளை ஆபரேஷன் பனி சிறுத்தை என்ற அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
4. சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு
சீனாவை வீழ்த்தி ஐநா சபையின் ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலைமை ஆணையகத்தின் உறுப்பினராக, இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
5. ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?
இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது.