சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்


சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்
x
தினத்தந்தி 12 Oct 2020 3:04 AM GMT (Updated: 12 Oct 2020 3:04 AM GMT)

சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

சியோல்

நாட்டின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்லக் கூடிய உலகின் மிகப் பெரிய அணுஆயுத ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் அச்சுறுத்தும் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணையை உலகின் வல்லரசு நாடுகளாலும் இலக்கு வைத்து தாக்கி அழிக்க முடியாது என்பது மட்டுமின்றி, ஏவுகணை எதிர்ப்பு வளையங்களை தகர்க்கும் சக்தி கொண்டவை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழா கடந்த 10 ந்தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் விழாவில் உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறவிருக்கும் ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது.

புதிய ஐசிபிஎம், ஹவாசாங் -16, சுமார் 25-26 மீ நீளம் கொண்டது. மற்றும் 2.5-2.9 மீ விட்டம் கொண்டது.வ் நவம்பர் 2017 இல் ஒரு முறை சோதனை செய்யப்பட்ட வடக்கின் ஹ்வாசோங் -15 ஐசிபிஎம் ஏவுகணையை விட சுமார் 4-4.5 மீ நீளமும் சுமார் 0.5 மீ பெரிய விட்டம் கொண்டது.

 உண்மையில், புதிய ஏவுகணை உலகின் மிகப்பெரிய மொபைல் ஐசிபிஎம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஏவுகணையின் ஏவுதள எடை சுமார் 100,000-150,000 கிலோ என மதிப்பிடப்பட்டு உள்ளது.சீன டி.எஃப் -41 திட-உந்துசக்தி ஏவுகணை 80,000 கிலோ ஆகும் முன்னாள் சோவியத் எஸ்எஸ் -24 ரயில்-மொபைல் திட ஐசிபிஎம்-க்கு சுமார் 104,000 கிலோ ஆகும்,

தற்போது இந்த ஹவாசாங் -16 ஏவுகணை குறித்து உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் பலர் வெளியிட்டுள்ள கருத்துகள், பீதியை கிளப்பியுள்ளது.

இந்த ஏவுகணையானது வடகொரியாவால் உண்மையில் சாத்தியமாகியுள்ளது என்றால், அது அமெரிக்காவுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்கிறார் சூ தியான்ரான் என்ற அணுஆயுத ஆய்வாளர். மேலும், இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவின் எந்த ஒரு மாநிலத்தையும் சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த ஏவுகணை. அதாவது, வடகொரியாவில் இருந்து இந்த ஏவுகணையை ஏவிய சில நொடிகளில் நியூயார்க் மாகாணமும் அங்குள்ள மக்கள் தொகையில் 25 லடசம் பேர் மொத்தமாக சாம்பலாகி விடுவர்.

அது மட்டுமின்றி, 40 லட்சம் மக்கள் காயங்களுடன் தப்புவார்கள் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதுபோல் அதே விழாவில் புதிய “புகுக்சோங் -4” எஸ்.எல்.பி.எம் பரிமாணங்களை கொண்ட நீர்மூழ்கி ஏவுகணையையும் வடகொரியா அறிமுகப்படுத்தியது. 

இந்த விழாவில் பேசிய வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தேசத்தின் பாதுகாப்புக்கு இன்னும் பல ஏவுகணைகளை உருவாக்குவோம் எனவும்,இதுவரை உங்கள் மகத்தான நம்பிக்கைக்காக எதையும் திருப்பித்தரவில்லை என்பதை அறிந்து வெட்கப்படுகிறேன்,

நமது மக்களை கடினமான வாழ்வாதாரத்திலிருந்து வெளியே கொண்டு வர எனது முயற்சிகளும் அர்ப்பணிப்பும் போதுமானதாக இல்லை எனவும் கிம் ஜாங் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், வடகொரியா போன்ற ஒரு ஏழை நாட்டுக்கு இத்தனை சக்திவாய்ந்த ஒரு ஏவுகணை தேவையா என்ற கேள்வியும் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story