உலக செய்திகள்

இங்கிலாந்தில் 4 ஆண்டுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 408 பேர் கைது + "||" + 408 sex workers arrested in UK over 4 years

இங்கிலாந்தில் 4 ஆண்டுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 408 பேர் கைது

இங்கிலாந்தில் 4 ஆண்டுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 408 பேர் கைது
இங்கிலாந்தில் பாலியல் தொழிலில் இருக்கும்பொழுது ஏதேனும் விபரீதம் நடந்து விட்டால், அதற்காக போலீசாரை அழைக்க முடியாத சூழல் உள்ளது.
லண்டன்,

ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தரும் புலம் பெயர்வோர் பற்றிய ஆவணங்களை லாரா அகஸ்டின் என்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்துள்ளார்.  அதன் முடிவில், பணம் சம்பாதிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தருபவர்கள் இரண்டு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர்.  அவற்றில் ஒன்று வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவது.  மற்றொன்று பாலியல் தொழிலில் ஈடுபடுவது என்ற அதிர்ச்சி கலந்த விசயங்களை அறிந்துள்ளார்.

விபசாரத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக இறந்து விடுவது மேலானது என பலர் கூறுகின்றனர்.  வேறு சிலர், வீடுகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும்பொழுது, போலீசார் வந்து விட்டால் நாங்கள் உயிரிழக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறுகின்றனர்.

எனினும், வீடுகளை தூய்மைப்படுத்தும் பணியை விட பாலியல் தொழிலில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட மடங்கில் பணம் கிடைக்கும்.  இதனால் தங்களுக்கு நாடு கடந்து பயணம் செய்ய பணம் அளித்தவர்களின் கடன்களை பெண்கள் அடைக்க முடியும் என்று கூறுகின்றனர்.  சொல்ல போனால் இதுவும் ஒரு வகை மனித கடத்தல் என்றே கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த ஆண்டு போலீசாரின் தேடுதல் பணி குறைந்து கைது எண்ணிக்கையும் 11% குறைந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரை இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து 408 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவல் அறியும் சுதந்திர சட்டத்தின்படி, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் நடப்பு 2020ம் ஆண்டு ஆகஸ்டு வரையிலான தகவல்கள் பெறப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையில் 64 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  கடந்த 2017ம் ஆண்டு கென்ட் நகர போலீசாரால் 99 பேர் கைது செய்யப்பட்டதே இதுவரையிலான அதிக எண்ணிக்கையாகும்.

இதுதவிர தேம்ஸ் பள்ளத்தாக்கு (45 பேர்), பெட்போர்டுஷைர் (32 பேர்) மற்றும் லண்டன் (27 பேர்) கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எனினும், பிற நகர போலீசார் எந்த தகவலையும் வெளியிட மறுத்து விட்டனர்.  கைது செய்யப்பட்ட பலர் விசாரணைக்கு கொண்டு செல்லப்படுவதில்லை.  கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 48 பேரே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர் என நீதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இங்கிலாந்தில் செக்சை விற்பதற்கு அனுமதி உள்ளது.  ஆனால் விபசார தொழிலுக்கு அனுமதி இல்லை.  நியூசிலாந்து நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு முதல் பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வ அனுமதி உள்ளது.

இதுபற்றி கடந்த 1980ம் ஆண்டு முதல் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் எமிலி என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கூறும்பொழுது, குழந்தைக்கு தாயான பின்னர் மீண்டும் இந்த தொழிலுக்கு சென்றேன்.

என்னுடன் மற்றொரு பாலியல் தொழிலாளியும் பணிபுரிகிறார்.  இது ஒரு பாதுகாப்பிற்காகவே.  போலீசாரிடம் சிக்கினால் 7 வருட சிறை தண்டனை உண்டு.  நாள்தோறும் ஆபத்துடனே பணி செய்ய வேண்டி உள்ளது என கூறினார்.

நாள் முழுவதும், மக்களை சந்தோசப்படுத்தும் முயற்சியிலேயே செலவழிகிறது என கூறும் எமிலி, கதவு தட்டப்பட்டால் நீங்கள் இன்னும் குற்றவாளியாக உள்ளீர்கள் என்றே அர்த்தம்.  என்ன தவறு நடந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ வேண்டி உள்ளது.  நாங்கள் உண்மையில் குற்ற செயல் எதனையும் செய்யவில்லை.  சட்டங்களே குற்றம் நிறைந்தவையாக உள்ளன என கூறுகிறார்.

குழந்தைகளை கவனிக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை கவனித்து விட்டே தாய்மார்கள் இதில் ஈடுபடுகின்றனர்.  அதனால் ஒருவரையும் நீங்கள் குற்றவாளியாக ஆக்க கூடாது என்று கூறும் எமிலி, தன்னை போன்று பிற பாலியல் தொழிலாளர்களும் இங்கிலாந்தில் பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர் என கூறுகிறார்.

கொரோனா பாதிப்பு காலத்தில் கடும் ஊரடங்கு நடவடிக்கைகளால் பணி செய்வது கடினம் ஆக உள்ளது என கூறும் இவர், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம் என கூறுகின்றனர்.

இவர்கள் பணியில் இருக்கும்பொழுது ஏதேனும் நடந்து விட்டால், அதற்காக போலீசாரை அழைக்க முடியாத சூழல் உள்ளது.  ஏனெனில் இவர்களையே போலீசார் கைது செய்ய கூடிய சூழ்நிலையால் ஒருவித அச்சத்துடனேயே இவர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு.
2. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் 150 பேர் கைது
திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது
கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. குளித்தலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 25 பேர் கைது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.