உலக செய்திகள்

மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் முன்னாள் காதலி + "||" + Wife, sister missing; North Korean Kim's ex-girlfriend

மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் முன்னாள் காதலி

மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் முன்னாள் காதலி
மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் எஜமானி என்று பலரால் நம்பப்படும் முன்னாள் காதலி
லண்டன்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக அவருடன்ஒரு பெண் தென்படும் விஷயம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.அந்த பெண்ணின் பெயர் ஹியோன் சாங் வோல்
(43), அவர் கிம்மின் முன்னாள் காதலி. ஹியோன் ஒரு பிரபல பாப் பாடகியாவார்.

முன்பெல்லாம் கிம்முடன் அவரது தங்கையான கிம் யோ ஜாங் தான் அதிகாரப்பூர்வ பயணங்களில் கூட இருப்பார்.ஆனால், இப்போது அவரைக் காணாததால், ஹியோன் அவரது இடத்தைத் தட்டிப் பறித்துக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சில அரசு நிகழ்ச்சி ஒன்றில், அரசு விருந்தினர்களை அழைத்துச் சென்று இருக்கைகளில் அமரவைப்பது, அவர்கள் கிம்முக்கு கொடுக்கும் மலர்களை வாங்கிக்கொள்வது போன்ற பணிகளை ஹியோன் செய்ததைக் காணமுடிந்ததாகவும், முன்பு இந்த பணியை கிம்மின் தங்கை செய்துவந்ததாகவும், இந்த நிகழ்ச்சியில் அவர் சற்று தள்ளி பேசாமல் அமர்ந்திருந்ததாகவும் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கிம் ஜான் உன்னுக்குப் பின் அவரது தங்கைதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ஒதுக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.இந்நிலையில், நீண்ட நாட்களாக கிம்மின் மனைவியையும் பொது நிகழ்ச்சிகளில் காண இயலாததால் சந்தேகம் நிலவிவந்த நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.

மனைவி மற்றும் சகோதரியின் பாத்திரங்களை சிக்கலாக்கும் மூன்றாவது பெண் ஹியோன் சாங்-வோல் (வயது 43) கிம்மின் எஜமானி என்று பலரால் நம்பப்படுகிறது. வட கொரியாவின் ஸ்பைஸ் கேர்ள்ஸ் என்றும் அழைக்கப்படும் பெண் மோரன்பாங் பேண்டின் முன்னணி பாடகராக விளங்கியவர் ஹியோன். ச

கிம் சகோதரியால் நடத்தப்பட்ட “செயல் இயக்குநர்” வேலையை ஏற்றுக்கொண்டு உள்ளார். சில அறிக்கைகள் ஹியோன் அவரது தோழி மட்டுமே அல்லது அவர் மறைந்த தந்தை கிம் ஜாங் இல் லின் கடைசி காதலராகவும் இருக்கலாம் என்று கூறுகிறது.

ஹியோனுடனான கிம்ஸ் காதல் விவகாரம் அவரது தந்தையால் நிறுத்தப்பட்டதாக சில ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன, ஆனால் 2011 ஆம் ஆண்டில் கிம் ஜாங் இல் இறந்த பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒருவருக்கொருவர் காதல் செய்யத் தொடங்கின.

"ஹியோன் மிகவும் சக்திவாய்ந்த பெண்" என்று இப்போது அமெரிக்காவில் வசிக்கும் வட கொரியாவில் பிறந்த ஜேசன் லீ கூறினார். "அவர் நிச்சயமாக மனைவியை விட சக்திவாய்ந்தவர், ஆனால் அவர் சகோதரியைப் போல சக்திவாய்ந்தவராக இருக்க முடியாது" என்று லீ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிஏற்க உள்ள நிலையில் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.
2. புத்தாண்டில் மக்களிடம் மன்னிப்பு கோரிய வடகொரியா தலைவர்
பொருளாதார முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக மக்களிடம் புத்தாண்டில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரினார்.
3. ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மை- வட கொரியா
ஐ.நா.அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மையாக உள்ளது என வட கொரியா குற்றஞ்சாட்டி உள்ளது.
4. சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்
சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
5. எந்த நிபந்தனையுமின்றி வடகொரியா அதிபரை சந்திக்க தயார்- ஜப்பான் புதிய பிரதமர்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை எந்த நிபந்தனையுமின்றி சந்திக்க தயராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.